- கவிதைமழை அ. நவஜோதி அருண்
சிவந்தவானம்
செந்நிற
மண்ணை
நனைக்கப்
பார்க்கும்
சாயுங்கால
மழை
அந்தி சாயுங்கால
மழை
திடமான
புழுதிக்காற்று
ஓர் அடை மழையை
அறிவிக்க,

தடுமாறும்
காக்கைகள்
பின்னோக்கித்
தள்ளப்பட
தன்
குஞ்சுகளைதேடி.....
கூட்டமாக
காற்றில் பறக்கும்
காகிதக்
குப்பையெனக்
காக்கைகள்
கூட்டம்
கடல்காற்றும்
கார்மேகம் காதல்.... செய்ய,
மோதலாகி
இடியிடிக்க
மின்னலது
வானம்கிழித்த
பொத்தலிலே...
மேகம் கரைத்து
மேனிபிறக்க
துளிகளென
தூறல்பிடித்து,
கம்பிகளென
சாரல்பிடித்து
தரையிறங்கி
தாளம்போடும்
தண்ணீர் மழை
தெருக்கள்
நனைத்து,
இலைகள்
தெளித்து,
மரங்கள்
குளித்து,
மகிழ்ச்சி கொள்ளும்
மா மழை
சேறும்
சக்தியும்
பூசினாலும்,
தளராது
சேருமிடம்
கடலென
குறித்து
உடலை நகர்த்தும்
உற்சாக மழை
ஓய்வதில்லை.
ஒரு போதும்
குறிக்கோளிலிருந்து
விலகாதும்
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)
பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மாபெரும் வலி வேறொன்றும் இல்லை!
அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)
அவள் நேசிக்கிறாள்!
மழை!
அவளும் நானே அவனும் நானே
என்ன தவம் செய்தேனோ...!
"டேய் ரஞ்சித், இந்தப் பெயர்?".. அழாதே அனாமிகா (பயணம் 4)
ரூ.50-க்கு அன்லிமிடெட் நைட் டேட்டா : ஜியோவின் புதிய அதிரடி ஆஃபர் அறிவிப்பு
{{comments.comment}}