இன்று நவராத்திரி 5ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Oct 07, 2024,11:03 AM IST

சென்னை :   2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 5ம் நாள் அக்டோபர் 07ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரியின் ஐந்தாம் நாள் பஞ்சமி திதியுடன் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் மகாலட்சுமி தாயாரும், வாராஹியையும் வழிபடுவதால் வெற்றிகள் தேடி வரும். காரியங்களில் இந்த தேக்க நிலை, தடைகள் யாவும் விலகும்.


நவராத்திரி 5ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகையின் வடிவம் - மோகினி (வைஷ்ணவி)

கோலம் - பறவை வகை கோலம்

மலர் - மனோரஞ்சிதம்/ பாரிஜாதம்

இலை - திருநீற்றுப் பச்சை இலை

நைவேத்தியம் - தயிர் சாதம்

சுண்டல் - கடலை பருப்பு சுண்டல்

பழம் - மாதுளை

நிறம் - சிவப்பு


நவராத்திரியின் ஐந்தாம் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் ஸ்கந்த மாதாவை வழிபட வேண்டும். சிங்க வாகனத்தில், மடியில் குழந்தை வடிவமான ஆறுமுகக் கடவுளை அமர்த்திக் கொண்டு, தன்னுடைய இரு கரங்களிலும் தாமரை பூவை ஏந்தி, கருணையே வடிவமாக, தாய்மை பொங்கும் முகத்துடன் காட்சி தரக் கூடியவள். இவளை வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். இவளை சிவப்பு நிற மலர்கள் படைத்து, தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பாள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்