சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.
வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 09 ம் நாள் அக்டோபர் 11 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் கடைசி நாள் சரஸ்வதியை வழிபட வேண்டிய நாளாகும். இதை நவராத்திரி நவமி என்றும், மகாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஞானத்தை தரும் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை :
அம்பிகை வடிவம் - பரமேஸ்வரி
கோலம் - தாமரை வகை கோலம்
மலர் - தாமரை
இலை - மரிக்கொழுந்து
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சுண்டல் - கொண்டைக்கடலை
பழம் - நாவல் பழம்
நிறம் - வெந்தய நிறம்
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நவதுர்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற துர்கையின் வடிவத்தை வழிபட வேண்டும். இவள் வெற்றி, மகிழ்ச்சியை வழங்கக் கூடியவள். இவளை நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் அழைப்பதுண்டு. இவளை பல விதமான பழங்கள், பாரிஜாத மலர்கள் ஆகியவற்றால் பூஜை செய்து வழிபட வேண்டும். இவள் அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}