சென்னை : வாழு...வாழ விடு என தனுஷ் பேசிய டயலாக், அவர் பேசிய நிகழ்ச்சியின் வீடியோவை வைத்தே அவருக்கு பதில் சொல்லி பதிவு போட்டுள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நானும் ரெளடி தான் படத்தின் பணியாற்றியதில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாராவின் திருமணத்தின் போதே அவர்களின் காதல் வாழ்க்கையை ஆவண படமாக எடுத்து வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருந்தார். திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இந்த ஆவண படம் நெட்பிளிக்சில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அது பற்றி எந்த தகவல் வெளியாகவில்லை.
நயன்தாராவின் ஆவண படத்திற்காக நானும் ரெளடி தான் படத்தின் 3 விநாடி வீடியோ காட்சிகள், 2 பாடல்கள், இசை ஆகியவற்றை தங்களின் ஆவண படத்தில் பயன்படுத்துவதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் நயன்தாரா தரப்பில் இருந்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பலமுறை இவர்கள் கேட்டும் தனுஷ் பதில் ஏதும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தான் ஆவணப்படம் வெளியிட தாமதமானதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தனுஷ் அனுமதி வழங்காததால் வேறு மாதிரியாக எடிட் செய்து ஆவணப் படத்தை தயாரித்து முடித்து நவம்பர் 18ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆவண படத்திற்கான டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய படத்தின் காட்சிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் நயன்தாரா தரப்பு பயன்படுத்தியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்தும், தனுஷை கடுமையாக தாக்கியும் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 பக்கத்திற்கு அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் தன்னை பழிவாங்குவதாகவும், தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவே இப்படி நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சினிமா பின்புலம் இல்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாமல் சுயமாக சினிமாவில் முன்னேறுபவர்களின் வெற்றியையும் தனுஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் செம காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டைரக்டர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பேசிய பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து, கருத்து பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோவில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய தனுஷ், " ஒருவர் மீது இருக்கும் அன்பு தான் மற்றவர் மீது வெறுப்பாக மாறுகிறது. உனக்கு பிடித்தால் ஒருவரைக் கொண்டாடு. இல்லாவிட்டால் விலகி சென்று விடு. இது ஒன்று ராஜ தந்திரம் கிடையாது. நெகடிவிட்டி உலகில் அதிகரித்து விட்டது. யாருக்கும் யாரும் நன்றாக இருந்தால் பிடிப்பது கிடையாது. வாழ்க்கை எளிமையானது. வாழு...வாழ விடு" என பேசி இருந்தார்.
இந்த வீடியோவுடன், தனுஷ் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் இணைத்து வீடியோவாக்கி வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன், " குறைந்த பட்சம் இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி தீவிர ரசிகர்களுக்காக நான் கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன். பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண வேண்டும்" என கருத்து பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}