சென்னை: போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி ,கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஞானேஸ்வரர் பேட்டியளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாஷ் பார்க் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு போதைப் பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் சூடோ பெட்ரின் என்ற வேதிப்பொருளை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும். இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இதில் ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முக்கிய புள்ளியாக செயல்பட்டது தெரியவந்தது.மேலும் இந்த ரசாயன பொருட்களை ஆஸ்திரேலிய மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதாகவும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் இவரை கண்டுபிடிக்க தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தனர்.
நேற்று ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதனை அடுத்த இன்று ஜாபர் சாதிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் சென்று,இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திய போது, இவர் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமானம் போன்ற தொழிலில் முதலீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்கனவே இவர் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருளை கடத்தியுள்ளார்.மேலும் ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம் பெட்டமைன் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}