சென்னை: நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக தகவல்கள் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மும்பையில் நீட் தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந் த 20 வயது மாணவி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாணவி மீது மும்பை போலீசார் வழக்கு தொடுத்தனர். பின்னர் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. தொடர் விசாரணையின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் விடைத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம் செய்தது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. மறுபக்கம், மத்திய அரசு நீட் தேர்வில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி வி எம் பி எழிலரசன், தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு முறைகேடு என்பது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும். தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகள் மற்றும் குளறுபடிகள் களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற பாஜக அரசின் எதேச்சதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}