காத்மாண்டு: நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளார் பிரதமர் கே.பி. சர்மா ஒலி.
தலைநகர் காத்மாண்டுவில் வெடித்த மிகப் பெரிய ஜென் இசட் இளைஞர்களின் கலவரத்தைத் தொடர்ந்து இந்த முடிவை நேபாள பிரதமர் எடுத்துள்ளார். இந்த கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மாண்டு மட்டுமல்லாமல் நேபாளம் முழுவதும் கலவரம் வெடித்ததால்தான் நேபாள அரசு பின்வாங்கியுள்ளது.
சமூக ஊடக பயன்பாட்டை நிறுத்த அரசாங்கம் விரும்பியதாகவும், ஆனால் சிலரின் தலையீட்டால் நிலைமை மோசமானதாகவும் பிரதமர் சர்மா கூறியுள்ளார். ஊழலை ஒழிக்கவும், சமூக ஊடக தடையை நீக்கக் கோரியும் நடந்த போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடையை நேபாள அரசு நீக்கியது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நடந்த வன்முறை போராட்டங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார். இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சிலரின் தலையீடு இருந்ததால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர் கூறினார். சமூக ஊடக பயன்பாட்டை நிறுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அதற்கான சூழலை உருவாக்க முயற்சிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
"இன்று Gen-Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நம் குழந்தைகள் அமைதியாக தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், சிலரின் தலையீட்டால் நிலைமை மோசமாகி, குடிமக்களின் உயிர்கள் பறிபோனது. சமூக ஊடக பயன்பாட்டை நிறுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அதற்கான சூழலை உருவாக்க முயற்சிக்கும். இதற்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலைமை தொடர அனுமதிக்க மாட்டோம். இன்றைய நிகழ்வுகள் மற்றும் சேதங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ய மாட்டார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பிரிதிவி சுப்பா குருங் தெரிவித்தார். "பிரதமர் இப்போது ராஜினாமா செய்ய மாட்டார்," என்று அவர் கூறினார்.
முன்னதாக நேபாள அரசு, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், X போன்ற சமூக ஊடக செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த செயலிகள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால், இப்போது தடை நீக்கப்பட்டதால், இந்த செயலிகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சமூக வலைதள பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இவ்வளவு பெரிய கலவரம் வெடித்து, பலர் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை போனது உலக அளவில் இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}