மதுரையின் புதுப்பெருமை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்.. இன்று திறப்பு.. காத்திருக்கும் காளைகள்

Jan 23, 2024,05:40 PM IST

மதுரை: அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு புது அரங்கம் (கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்) புதன்கிழமை திறக்கப்பட உள்ளது. அரங்கம் திறப்பை முன்னிட்டு கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. காளைகளும், காளையர்களும் மோதும் வெறித்தமான ஆட்டத்தைக் காண அலங்காநல்லூர் தயாராகி வருகிறது.


தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று  ஜல்லிக்கட்டு. பண்டைய காலம் தொட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் இன்று வரை மாறாமல் இருப்பவைகளில் ஒன்று வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தான். இத்தகைய சிறப்பு மிக்க போட்டிகளை நடத்துவதற்கு சரியான இடம் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது.




2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. தற்போது சட்டரீதியாக ஜல்லிக்கட்டுக்கு உரிய அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் கொடுத்து விட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன.


இந்த போராட்டத்திற்கு பின் நேரடியாக போட்டியை காண தமிழக மட்டுமின்றி வட மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் அலங்காநல்லூருக்கு பார்வையாளர்கள் வருவது அதிகரித்தது. இதனால் அவர்கள் அமர்ந்து போட்டியை பார்க்க அலங்காநல்லூரில் போதிய வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஏமாறும் நிலை ஏற்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு என்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 




கோரிக்கையை ஏற்ற திமுக அரசு அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் புதிய ஸ்டேடியம் கட்ட தீர்மானித்தது, இடமும் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளை 2023 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.


66.8 ஏக்கரில், ரூபாய் 44 கோடியில், ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டியை போல் 10,000 பேர் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது, காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன. தரைதளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடு பிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனை கூடம், முதல் உதவி கூடம், பத்திரிக்கையாளர் கூடம்,  காளைகள் பதிவு செய்யும் இடம்,  பொருட்கள் பாதுகாப்பு அறைகள் என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து தேவைகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 




மேலும், முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அறைகளும், உணவு மற்றும் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம்  போலவும், உட்புறத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் போலவும் அமைக்கப்பட்டுள்ளன. 


இந்த பிரம்மாண்டமான அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை ஜனவரி 24ம் தேதி முதல்வர் மு.க..ஸ்டாலின் காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




புதன்கிழமையன்று ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா மட்டும் இல்லீங்க,  ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க 9312 காளைகளும் 3,669 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளார்கள். ஆக, மதுரையில் ஒரே மாதத்தில் 2வது பொங்கலை மக்கள் கொண்டாட உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்