- மஞ்சுளா தேவி
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்காக நமக்கு எப்படி இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்ததோ .. அது போல் மழையும் இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்தது. தற்போது மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். மேலும் வருகின்ற 17ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டய தேர்வுகள் மற்றும் டிப்ளமோ போன்ற தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விபரம் https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}