வாகன ஓட்டிகளே அலார்ட்டா இருங்க... பாஸ்ட் டேக்கின் புதிய விதிமுறைகள்..இன்று முதல் அமல்!

Feb 17, 2025,03:55 PM IST

சென்னை: நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


பயனாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டது தான் பாஸ்டேக் வசதி. டோல்கேட்டில் அதிக நேரம் பயனாளர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க கொண்டு வரப்பட்டதே பாஸ்டேக் வசதி. அதன்படி, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவதினால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய 714 வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமாக முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்த கட்டண முறையை நிர்வகித்து வருகிறது. பிப்ரவரி 17ம் தேதி முதல் அதாவது இன்று முதல் புதிய விதி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் அபராதங்களைத் தவிர்க்க, புதிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதிய பாஸ் டேக் விதிமுறைகள்:




பாஸ்டேக்கில் லோ பேலன்ஸ் இருந்தால், எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டுமாம். அதாவது பாஸ்டேக் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால் அதை டோல்கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். பிளாக் லிஸ்ட்டிலிருந்து நீக்கப்படாத வாகனங்களின் பாஸ்டேக் ஏற்றுக்கொள்ளப்படாது. 


வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு மற்றும் சிக்கல் இருந்து பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.


பாஸ்டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உண்டு. 


பாஸ் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டுமாம்.


அபராதங்களை தவிர்க்க செய் வேண்டியவைகள்:


அபராதங்களை தவிர்க்க பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு, பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும்,பயனர்களின் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்