ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

Jun 30, 2025,06:23 PM IST

டெல்லி: ஜூலை 1 முதல் இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்  கட்டண உயர்வை அமல்படுத்துகிறது. 2020ம் ஆண்டுக்குப் பிறகு ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


ரயில் கட்டண உயர்வு மட்டுமல்லாமல், காத்திருப்புப் பட்டியல் வரம்பை உயர்த்துவது, முன்பதிவு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது, தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்குவது மற்றும் சிறிய கட்டண மாற்றங்களைச் செய்வது ஆகியவை இதில் அடங்கும். 


இந்த மாற்றங்கள் ரயில்வே முன்பதிவு முறையை ஒழுங்குபடுத்தவும், அதிக தேவை உள்ள டிக்கெட்டுகளை நியாயமான முறையில் வழங்கவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முன்பதிவு முறைக்கு மாறவும் உதவும்.


ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் :




- தூரப் பயணங்களுக்கான கட்டண உயர்வை ரயில்வே நாளை முதல் அமல்படுத்துகிறது. 2020 க்குப் பிறகு முதல் முறையாக கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி. Non-AC மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.01 உயரும். AC கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.0.02 உயரும். 


புறநகர் ரயில் கட்டணங்கள், 500 கி.மீ தூரத்திற்குள் உள்ள இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர சீசன் பாஸ்களில் எந்த மாற்றமும் இல்லை. 


500 கி.மீ., தூரத்திற்குள் உள்ள 2ம் வகுப்பு டிக்கெட்களுக்கு ரூ.5 கட்டணமும், 501 முதல் 1500 கி.மீ., வரையிலான பயணத்திற்கு ரூ.10 கட்டணமும்,  1501 முதல் 2500 வரையிலான பயணத்திற்கு ரூ. 15 கட்டணமும் உயர்த்தப்படுகிறது. 


- AC காத்திருப்புப் பட்டியல் 25% லிருந்து 60% ஆக உயர்வு: ஏசி கோச்சுகளுக்கான காத்திருப்புப் பட்டியல் வரம்பு 25% ஆக இருந்தது. இது தற்போது 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஏசி பெட்டிகளில் அதிக இடங்கள் காலியாக இருந்ததாலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


- Non-AC காத்திருப்புப் பட்டியல் 30% ஆக நிர்ணயம்: ஏசி அல்லாத ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் காத்திருப்புப் பட்டியல் 30% ஆக இருக்கும். இது அதிக அளவில் பயன்படுத்தப்படும் பெட்டிகளில் தேவையை பூர்த்தி செய்யும். அதே நேரத்தில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும்.


- முதல் முன்பதிவு சார்ட் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு தயார்: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும். முன்பு இது 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த மாற்றம் ஏற்கனவே சில ரயில்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.


- தட்கல் முன்பதிவுகளுக்கு ஆதார் கட்டாயம்: ஜூலை 1 முதல், ஆன்லைனில் அல்லது PRS (Passenger Reservation System) கவுண்டர்களில் செய்யப்படும் அனைத்து தட்கல் முன்பதிவுகளுக்கும் ஆதார் இணைக்கப்பட்ட User ID பயன்படுத்தப்பட வேண்டும். ஜூலை 15 முதல், பயணிகளின் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயை உள்ளீடு செய்த பிறகுதான் முன்பதிவு முழுமையடையும்.


- தட்கல் முன்பதிவு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு ஏஜெண்டுகளுக்கு அனுமதி இல்லை: தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதை தடுக்கவும், தனிப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்