சென்னை மக்களே... புத்தாண்டுக்கு "பீச்" ரெடி.. "சிட்டி"யும் ரெடி.. ஆனால் இதை மனசுல வச்சுக்கங்க!

Dec 31, 2023,05:32 PM IST

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு 2024 இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கூடவே காவல்துறையும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுடன் மக்கள் பாதுகாப்பான முறையில் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


இன்று டிசம்பர் 31ம் தேதி.. விடிந்தால் 2024ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னை மாநகர காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளுடன் அசத்தலாக மக்கள் சேவையாற்ற காத்திருக்கிறது.




புத்தாண்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சென்னை மாநகர காவல்துரையின் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர்கள் செய்தியாளர்களிடம் அதுகுறித்து எடுத்துரைத்தனர். பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும், விதி மீறல்களில் ஈடுபடாமல் முழுமையாக புத்தாண்டைக் கொண்டாடுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


சென்னை காவல்துறை புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் விவரம்:


  • பாதுகாப்புப் பணியில் 18,000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
  • 1500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • நகர் முழுவதும் 420 வாகன சோதனை குழுக்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளன
  • 25 சாலை பாதுகாப்பு பட்ரோல் வாகனக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
  • நகரில் உள்ள 100 கோவில்கள், சர்ச்சுகள் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
  • நீரிலும், நிலத்திலும் செல்லக் கூடிய வாகனங்கள் பாதுகாப்புப்  பணியில் ஈடுபடுத்தப்படும்.
  • போலீஸ் உதவி மையங்கள் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
  • குற்றத் தடுப்பு, போக்குவரத்து நிர்வாக வசதிக்காக டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
  • பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கண்காணிப்புக் கோபுரங்கள் அமைப்பு.
  • நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
  • பொதுமக்களுக்கு வழி காட்டுவதற்காக ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுறுத்தல்கள் விடுக்கப்படும்.
  • வீடுகள், கடற்கரை, பொது இடங்கள் என எந்த இடத்திலும், பட்டாசுகளை வெடிக்க்க கூடாது.
  • கடலுக்குள் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள் நள்ளிரவு தாண்டி 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
  • குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ரேஸ் விடுவது, பெண்களை துன்புறுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
  • இரவு 8 மணிக்கு மேல் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான கடற்கரைப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
  • இதே காலகட்டத்தில் பெசன்ட் நகர் 6வது அவென்யூ பகுதியிலும் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
  • வீலிங், ரேசிங் விடுவோரைக் கண்காணித்துப் பிடிப்பதற்காக 6741 சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • 173 இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெறும்.
  • ரேசிங் நடப்பதைக் கண்காணிப்பதற்காக 33 இடங்களில் சிறப்பு சோதனை மையங்கள் அமைப்பு.
  • வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக 52 டோயிங் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும்.




பொதுமக்கள் காவல்துறை வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்து புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை மக்களிடம் அன்பான கோரிக்கை வைத்துள்ளது.


பிறகென்ன மக்களே.. இவ்வளவு அற்புதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செஞ்சு கொடுத்திருக்காங்க. அவங்க சொல்படி கேட்டு நடந்துகிட்டு, ஜாலியா புத்தாண்டைக் கொண்டாடலாம் வாங்க!

சமீபத்திய செய்திகள்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்