சுறுசுறுப்பு, துடிப்பு, கலகலப்புடன் செயல்படும் விருச்சிக ராசிக்காரர்களே, பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய ஆண்டாக அமைய போகிறது. அது தலைகனமாக மாறாமல் பார்த்துக் கொண்டால் நன்மைகள் நிலைத்திருக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிலும் பொறுமையாக நடந்து கொண்டால் உயர்வுகள், எதிர்பார்த்த இடமாற்றம் அனைத்தும் தேடி வரும்.
அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய வேலைகளுக்காக முயற்சிப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகை ஆதாயத்தை தரும். உடன் பிறந்தவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி, அனுசரித்து செல்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பணவரவு அதிகரிப்பால் சேமிப்பும் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் வருமானம் வரும் சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். பணவரவில் அடிக்கடி சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு ஆகியவை கைகூடும். மே மாதத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள், பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்து செல்வது வாழ்க்கையில் அமைதியை நிலைத்திருக்க செய்யும். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வீடு, வாகனம் வாங்க வாய்ப்புகள் வரும். தெரியாத நபர்களை நம்பி பண விஷயங்களை ஒப்படைக்க வேண்டாம். அக்கம் பக்கத்தாரிடம் அனுசரித்து செல்லுங்கள். தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். கடன்களை திருப்பிச் செலுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு துறையினருக்கு சாதகமான சூழல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் வரலாம். மறுக்காமல் ஏற்றுக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புகழ்ந்து பேசி காரியம் சாதிக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கலைஞர்களுக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். யாருடனும் மோதல் போக்கு வேண்டாம். மாணவர்கள் மறதியை போக்கினால் கல்வியில் உயர்வு ஏற்படும். படிப்பில் கவனம் குறையலாம். தொடர்ந்து முயற்சித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இத சாதகமான ஆண்டாக இருக்கும். இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ஒற்றை தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்கங்களில் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம் : முருகப் பெருமான் வழிபாடு வாழ்வில் முன்னேற்றத்தை தரும். தடைகள் நீங்கி, சிந்தவைகளில் தெளிவு பிறக்க காளி அம்மனை வழிபடுவது சிறப்பு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}