எந்த காரியத்தை செய்தாலும் பக்தியுடன், முழு ஈடுபாட்டுடனும் செய்யும் தன்மை கொண்ட தனுசு ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டு ஏறுமுகமாக ஆண்டாக இருக்கும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். இந்த ஆண்டு முழுவதுமே சனி பகவான் 3ம் பாவத்தில் இருக்கிறார். கடந்த ஏழரை ஆண்டுகளாக தனுசு ராசிக்காரர்களை சனி பகவான் கொஞ்சம் நஞ்சம் இல்லாமல் ரொம்பவே பாடாய் படுத்தி விட்டார் என்றே சொல்லலாம். ஏழரை ஆண்டுகளாக ஒன்றுமே இல்லாத நிலையில் வைத்து அடி மேல் அடி என கொடுத்து விட்டார். 10 ரூபாய் சம்பாதித்தால் 8 ரூபாய் செலவு, 2 ரூபாய் சேமிப்பாக இல்லாமல் விரய செலவாகவே போய் கொண்டிருந்தது. கையில் காசு வருவதும் தெரியவில்லை. போவதும் தெரியவில்லை என்ற நிலை தான்.
விமோசன சனி.. நல்லது நடக்கும்

தற்போது சனி பகவான் 3ம் இடத்திற்கு விமோசன சனியாக மாறி உள்ளார். ஏழரை சனி முடிந்து விட்டது. அதனால் சனி பகவான் எப்படி எல்லாம் கெடுத்தாரோ, அதே போல் தற்போது உங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால் ஏதோ ஒரு ரூபத்தில் பணம் வந்து கொண்டே இருக்கும். 10 ரூபாய் சம்பாதிக்கும் உங்களை 100 ரூபாய் சம்பாதிக்க கூடிய நிலையில் வைப்பார். "சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" என்ற நிலை தான் இனி உங்களுக்கு.
போக ஸ்தானாதிபதியான ராகு பகவான் 4ம் வீட்டிலேயே இருக்கிறார். இதனால் உல்லாசமான வாகனங்கள் வாங்குவது, சொந்த வீடு வாங்குவது ஆகியவை இந்த ஆண்டில் கைகூடும். உங்களுக்கும் தாயாருக்கும் சுமூக உறவு ஏற்படும்.
கிரகப்பிரவேச யோகம் அமையும்
கேது பகவான் 10ல் இருப்பதால் வெளிநாடு செல்லக் கூடிய அமைப்புகள், வெளிநாடு பயணங்களால் லாபம் போன்ற ஏறுமுகமான வெளிநாட்டு பலனை தருகிறது. குரு பகவான் 4ல் செல்வதால் கிரகபிரவேச யோகம் அமையும். குரு பகவான் 6ம் பாவத்தில் செல்ல அமைப்பும் இருக்கிறது. இதனால் கடன் பட்டு சில விஷயங்களை செய்து, பிறகு கடனில் இருந்தும் விடுபடும் அமைப்பு ஏற்படுகிறது.
7,10 க்கு உடையவரான புதன் பகவான் ஜென்ம ஸ்தானத்தில் ஜனவரி மாதத்தில் 20 நாட்கள் செல்கிறார். அந்த சமயத்தில் திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை புதன் பகவான் வக்கிரமாகிறார். இந்த சமயங்களில் உங்களுக்கு அதிகமாக திருமண வாய்ப்புகள் கூடி வரும். ஜூலை முதல் செப்டம்பர் வரை சனி பகவானின் வக்கிர காலத்திலும் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.
மன ஆசைகள் நிறைவேறும்
6,11 க்கு உடையவனான சுக்கிர பகவான் மிகவம் சாதகமாக இருக்கிறார். சுக்கிர பகவான் அனைவருக்கும் முக்கியம் என்றாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியம். 11ம் இடம் என்பது மனதிருப்தியை குறிக்கக் கூடியது. இதனால் புகழ், மன ஆசைகள் நிறைவேறுவது, சமூக உறவு, பல காலமாக கைகூடாமல் இருந்த ஆசைகள் கை கூடுவது ஆகியவற்றை தரும். 6 இடத்திற்கும் சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வீடு தொடர்பாகவோ, வாகனம் தொடர்பாகவோ கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும். அந்த கடனும் உங்களுக்கு சுமூகமான இடத்தில் இருந்து கிடைக்கும். குரு பகவான் 2,3 ம் பாவத்திற்கு வரும் போது 3 ஆண்டுகளுக்குள் அந்த கடனும் நிவர்த்தியாகும்.
தனுசு ராசிக்காரர்கள் 2024 ம் ஆண்டில் நவகிரகங்களில் வடக்கு நோக்கி இருக்கும் குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் கொண்டைக் கடலை மாலை வாங்கி சாற்ற வேண்டும். சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை வாங்கி சாற்ற வேண்டும். சனிக்கிழமை வரக் கூடிய நாட்கள், மூல நட்சத்திரம் வரக் கூடிய நாட்கள், அமாவாசை நாட்களில் அனுமனை வழிபடுவது மிக அதிகமான நல்ல யோக பலன்களை கொடுக்கும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}