புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : கடக ராசிக்கு இந்த ஆண்டு.. செம திருப்தியா.. ஹேப்பியா இருக்கும்!

Dec 27, 2023,08:11 PM IST

மன உறுதியும், மன தைரியம், எதையும் சந்தித்து கடந்து வர முடியும் என்ற நம்பிக்கை கொண்ட கடக ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


கடக ராசிக்காரர்களுக்கு பிறக்க போகும் 2024 நல்ல யோக பலன்களை தரக் கூடியதாக இருக்கும். இந்த வருடம் முழுவதிலுமே கேது பகவான் 3ம் பாவத்திலும், ராகு பகவான் 9ம் பாவத்திலும், 7ம் இடத்தில் சனியும் இருக்க போகின்றனர். குரு பகவான், மே 1 ம் தேதி பெயர்ச்சி அடைந்து, 10 பாவத்தில் இருந்த 11ம் பாவத்திற்கு அக்டோபர் மாதம் 15ம் தேதி வக்கிரம் ஆகிறார். 3ம் பாவத்திலும் இருக்கும் கேது பகவானால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த புரொமோஷன் கிடைக்கும். பிடிக்காத வேலை செய்கிறேன், பிடிக்காத தொழில் செய்கிறேன், இனி மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல பலனை தரும்.




உறவுகள் வலுப்படும்


9ம் இடத்தில் இருக்கக் கூடிய ராகு பகவானால் தந்தையார் உடன் நல்லுறவு, பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம், வெளிநாடு செல்லக் கூடிய யோக அமைப்புக்களையும் கொடுப்பார். 5ம் இடத்துக்கு அதிபதியான  செவ்வாய் பகவான் இந்த ஆண்டு நவம்பர் மாதம் உங்களுடைய ராசியிலேயே வக்கிரம் அடைகிறார். 


ஜென்ம ஸ்தானத்தில் வக்கிரம் அடைவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். வம்ச அபிவிருத்தியும் ஏற்படும். மே மாதத்திற்கு பிறகு 11ம் பாவத்திற்கு வரும் குரு பகவானும் யோக பலன்களை தர உள்ளார். தெய்வ வழிபாடு செய்து அதன் மூலம் நன்மை ஏற்படும்.


நன்மைகள் அதிகம் காத்திருக்கு


5,9,1 ஆகிய இடங்கள் தெய்வ வழிபாட்டிற்கு உரிய இடங்களாகும். அதனால் தெய்வ வழிபாட்டு செய்து, அதன் மூலம் பல நன்மைகளை இந்த ஆண்டின் பெற முடியும். தெய்வ மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு தெய்வ பலம் அதிகரிக்கும். அதன் மூலம் தடைகள் விலகி, நன்மைகள் நடக்கும்.


இன்னும் அதிகப்படியான நன்மைகள் 2024 ம் ஆண்டில் ஏற்பட வேண்டுமானால் திங்கட்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவன் - பார்வதியை வலம் வந்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். சிவனுக்குரிய ஐந்தெழுந்து மந்திரமான ஓம் நவசிவாய மந்திரத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ, அத்தனை முறை சொல்லுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்