கருணை உள்ளமும், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் தன்மையும், மனோதிடமும் கொண்ட மகர ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைவரையும் அனுசரித்து போகக் கூடிய, தர்மத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, ஞான சிந்தனையும், எதிர்கால சிந்தனையும் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டு யோக பலன்கள், தெய்வ வழிபாடு, உல்லாச பயணங்கள் செல்வத என்று இருக்கும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி, மனதிருப்தி ஏற்படுவது என நல்ல பலன்கள் பல கிடைக்க போகின்றன. ஏழரை சனி நடந்தாலும், மகர ராசிக்கு சனி பகவான் ஆட்சி நாதன் என்பதால் நன்மையையே செய்வார்.
ராகு பகவான் இந்த ஆண்டு முழுவதுமே 3ம் பாவத்திலும், கேது பகவான் 9ம் பாவத்திலும் தான் இருக்க போகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக இருப்பதால் எந்த செயலை துவங்கினாலும் தடையில்லாமல் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். சொந்த தொழில், அரசு வேலை ஆகியோருக்கு பணி நிரந்தரம் ஏற்படும். ஐடி துறை, அக்கவுண்ட்ஸ் துறை, சிவில் துறை இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு அருமையாக இருக்க போகிறது.

மகர ராசிக்கு பாதகனான சூரிய பகவான் இருக்கும் 12ம் பாவத்தில், மே மாதம் 01ம் தேதியில் இருந்து குருவின் பார்வை விழுவதால் யோகமான பலன்கள் ஏற்படும். 4ம் பாவத்தில் இருக்கும் குரு பகவான் மே 01ம் தேதிக்கு பிறகு 05ம் பாவத்திற்கு சென்று விடுகிறார். அதற்கு முன்பு 9ம் பார்வையாக சூரிய பகவானை பார்ப்பதால் இந்த ஆண்டு நிச்சயம் மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன் உண்டு.
மகர ராசிக்காரர்கள் 2024ம் ஆண்டில், கர்ம வினைகளை போக்கக் கூடிய விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. "ஓம் கம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபட்டு வாருங்கள். 108, 1008 என எத்தவை முறை முடியுமோ அத்தனை சொல்லலாம். விநாயகப் பெருமான் ஏழரை சனியால் ஏற்படம் கர்மாக்களை குறைப்பார். விநாயகர் கர்மவினைகளை வேரோடு அகற்றக் கூடியவர் என்பதால் இந்த ஆண்டில் அவரை வழிபடுவதால் கூடுதலான நல்ல பலன்களை பெற முடியும்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}