புத்தாண்டு ராசிப்பலன்கள் 2024 : மீனம் ராசிக்கு.. திருமண யோகம், குழந்தை பாக்கியம், கடன் சுமை குறையும்

Dec 31, 2023,12:22 PM IST

நல்ல மனப்பக்குவமும், பொறுமையும், தன்னம்பிக்கையும், தயாள குணமும், திறமையும் கொண்ட மீன ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


2024 ம் ஆண்டு மீன ராசிக்கு தான் அதிகப்படியான நன்மைகளை வழங்க உள்ளது. குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக திருமணம் தள்ளிப் போய் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடைபெறும். வீட்டில் யாருக்காவது திருமணம் நடைபெற வேண்டி இருந்தால் நடக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5ம் பாவத்தில் இருக்கக் கூடிய சந்திர பகவான் உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்க உள்ளார். 




11ம் இடத்தில் கேதுவும், 12ம் இடத்தில் சனியும் இருப்பதால் நல்ல பலன்கள் ஏற்படும். 3,8 க்கு அதிபதியாக இருக்கக் கூடிய சுக்கிர பகவானும் அதிக நன்மைகளை வழங்க உள்ளார். சுக்கிர பகவான் வக்கிரம் அடைந்தால் தான் கெடு பலன்களை கொடுப்பார். ஆனால் இந்த ஆண்டில் அவர் வக்கிரம் அடையாமல் நேர்கதியில் செல்ல உள்ளதால் நன்மைகளே நடக்கும். வெகு நாட்களாக இருக்கக் கூடிய கடன் சுமை குறையும். கடனே இல்லாத நிலை ஏற்படும்.


6ம் அதிபதியான சூரிய பகவான், இந்த ஆண்டு நல்ல இடமான 10ம் பாவத்தில் இருக்கிறார். அதுவும் குருவின் பார்வையுடன் இருக்கிறார். அதனால் இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கவில்லை என்பவர்களுக்கு நல்ல வேலைக்கு மாறும் அமைப்பு ஏற்படும். பணி நிரந்தரம், சம்பள உயர்வு ஆகியவை ஏற்படும். 4,7 க்கு உடையவரான புதன் பகவானுக்குரிய ஷேர் மார்க்கெட், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருந்தாலும் புதன் பகவான் நன்மைகளையும் வழங்க உள்ளார்.


புதன் பகவான் வக்கிர கதியில் செல்லும் காலங்களில் நன்மைகள் அதிகமாகவே கிடைக்கும். சனி பகவான் வக்கிர கதியில் செல்லும் ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கவனமாக இருப்பது நல்லது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் புதன் வக்கிரம் அடையும் போது திருமணம் நடைபெற வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் டிசம்பர் மாதங்களில் குரு பகவான் வக்கிரம் ஆகும் போது பணி மாற்றம், இட மாற்றம், தொழில் போன்ற நன்மைகள் கிடைக்கும். 


2024 ம் ஆண்டில் மீன ராசிக்காரர்கள் நன்மைகளை அதிகமாக பெறுவதற்கு நரசிம்மர், சுதர்சனர், பைவரர், கிராம தேவதைகள் போன்ற காவல் தெய்வங்களை வழிபட வேண்டும். குறிப்பாக குதிரை வாகனம் கொண்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதாகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்