புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : ரிஷப ராசி நேயர்களே.. உங்களுக்கு இந்த வருஷம் ராஜயோகம்தான்!

Dec 26, 2023,06:30 PM IST
அனைவரிடமும் சுமூக உறவை மேற்கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இப்போது பார்க்கலாம்.

எந்த ஒரு விஷயத்திலும் தன்னுடைய பெயரை நிலை நாட்டுவதுடன், அதன் மூலம் பொருள் ஈட்டக் கூடிய சாமர்த்தியம் கொண்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் பணம் கொடுக்கல் இவர்களிடம் தெளிவாக இருக்கும். 2024 ம் ஆண்டில் மிக அற்புதமான பலன்களை ரிஷப ராசிக்காரர்கள் பெறப் போகிறார்கள்.

ராஜயோகம் காத்திருக்கு



உங்கள் ராசிக்கு 12ம் பாவத்தில் குரு பகவான் இருக்கிறார். இவர் அஷ்டமத்திற்கு உரியவர். அஷ்டம ஸ்தானாதிபதி 12ல் மறைவது நல்லது. இதனால் ராஜயோகத்துடன் தான் இந்த ஆண்டு உங்களுக்கு ஆரம்பமாகிறது.

11ம் பாவத்தில் ராகு பகவான், 5ம் பாவத்தில் கேது பகவான், 10ம் பாவத்தில் சனி பகவான் என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செல்ல உள்ளது. குரு மட்டும் மே மாதத்திற்கு மேல் ஜென்மத்திற்கு வருகிறார். இதனால் நீண்ட நாட்களாக வேலை செய்யக் கூடிய இடத்தில் இருக்கக் கூடிய கடன் சுமைகள் அல்லத பணி சுமைகள், பணி தேக்க நிலைகள் கண்டிப்பாக மாறும். ராகு பகவான் 11ம் இடத்தில் இருப்பதால் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் அல்லது தொழில் செய்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்பவர்களுக்கு நல்ல வாய்ப்பை தரும். தொழிலை விரிவுபடுத்த முடியாமல் பிரச்சனையில் இருந்து கொண்டிருந்தால் அதுவும் இந்த 2024 ல் மாறும்.

யோக பலன்கள் காத்திருக்கு

உங்களுடைய ராசி நாதனாக இருக்கக் கூடிய சுக்கிர பகவான் இந்த வருடம் முழுவதும் வக்கிரமோ, அதிசாரமோ அடையாமல் 450 டிகிரி வரை நேர்கதியில் பயணிக்க போகிறார். இந்த நல்ல யோக பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அக்டோபர் மாதம் 14ம் தேதி உங்களுடைய சப்தம ஸ்தானத்திலே சுக்கிர பகவான் வருகிறார். திருமணம் நடைபெற வேண்டியவர்களுக்கு திருமண பாக்கியத்தை ஏற்படுத்தித் தருவார். சூரிய பகவான் 4ம் அதிபதியாக இருப்பவர். இவர் மே மாதம் 14ம் தேதியில் இருந்து 11ம் பாவத்திற்கு செல்கிறார். அந்த சமயத்தில் வீடு வாங்க வேண்டும், வீடு மாற வேண்டும் என்பவர்களுக்கு நல்ல யோகமான காலம். மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை வீடு மாறுவது, புதுவீடு பால் காய்ச்சுவதற்கான நல்ல அமைப்புகள் ஏற்படும். 

அஷ்ட ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் ஜென்ம ஸ்தானத்திற்கு வருவதால் பயம் கொள்ள வேண்டாம். குரு பகவானச் பார்வையினால் பல விதமான நன்மைகளை உங்களுக்கு செய்கிறார். 5ம் பார்வையாக குழந்தை பாக்கியத்தை வழங்குகிறார். 9 ம் பார்வையாக பூர்வீக சொத்தில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் நிவர்த்தி செய்கிறார். 7ம் பார்வையாக மாற்று தொழில், கூட்டுத் தொழில், ஒரு தொழில் செய்து கொண்டே இன்னொரு இடத்தில் பகுதி நேரமாக வேலை செய்து பணம் ஈட்டுவது ஆகிய பலன்களை குரு பகவான் தரப் போகிறார். 7 ம் பார்வையாக திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமண பாக்கியத்தையும் தர உள்ளார். 

சம்பள உயர்வு சூப்பரா இருக்கும்

அரசு வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, தனியாரில் வேலை செய்பவராக இருந்தாலும் பணி நிரந்தரம், சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும். ஐடி, கட்டுமான துறையில் இருப்பவர்கள், சாஃப்ட்வேர் தொடர்பான தொழில் செய்பவர்கள், பங்குச்சந்தையில் முதலீடு அல்லது தொழில் செய்யக் கூடியவர்கள், இந்த ஆண்டு அமோகமான யோக பலன் அமைய உள்ளது. இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக் கூடிய ஆண்டாக இருக்கும். மஞ்சள் நிற அதிர்ஷ்டத்தை தரக் கூடிய நிறமாக இருக்கும். 1,5,10 ஆகியன அதிர்ஷ்டத்தை தரக் கூடிய எண்களாக உங்களுக்கு இருக்கும். இந்த ஆண்டில் தவிர்க்க வேண்டிய எண்கள் என்றால் 6,8 ஆகியவை ஆகும்.

ராசிநாதன் சுக்கிர பகவான் இந்த ஆண்டில் அள்ளிக் கொடுக்கக் கூடிய இடத்தில் இருப்பதால் வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவான் வழிபாடு செய்யுங்கள். இன்னும் அதிகமான பலன்களை பெறுவதற்கு வெள்ளிக்கிழமையில் காலை 6 முதல் 7 மணிக்குள்ளான நேரம் சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்தது. இந்த நேரத்தில் மகாலட்சுமிக்குரிய மகாலட்சுமி அஷ்டகத்தை படித்து, வழிபடுவது சிறப்பானது. இதை நீங்கள் செய்து வந்தாலே உங்களுக்கு குபேர சம்பத்துக்களும், யோக பலன்களும் கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்