"தப்பு நடந்திருச்சு.. ஸாரி".. கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்!

Mar 05, 2023,11:29 AM IST

நெவார்க், அமெரிக்கா: அமெரிக்காவின் நெவார்க் நகருக்கும், சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் "கைலாசா நாட்டுக்கும்" இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் துரதிர்ஷ்டவசமானது.. என்று கூறி அந்த நகர நிர்வாகம் தற்போது அதை ரத்து செய்துள்ளது.


கர்நாடகாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் நித்தியானந்தா.  ராம்நகர் கோர்ட்டில் இன்றும் கூட வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தலைமறைவாகி விட்ட நித்தியானந்தா எங்கு போனார் என்றே தெரியவில்லை. அவர் நாட்டை விட்டே ஓடி விட்டார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.



அதன் பின்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாக நித்தியானந்தா தரப்பு சமூக வலைதளங்களில் வடை சுட ஆரம்பித்ததும் புதிய பரபரப்பு உருவானது. இந்த நிலையில்  சமீப காலமாக அடுத்த லெவலுக்கு மாற  கைலாசா குரூப் முயற்சிப்பது தெரிய வந்தது. பல்வேறு நாட்டுக் குழுக்களுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதாகவும், ஒப்பந்தம் போடுவதாகவும் சரமாரியாக டிவீட்டுகளைப் போட்டவண்ணம் இருந்தனர்.


உச்சகட்டமாக ஐ.நா.சபை கூட்டத்திலேயே கலந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து கைலாசா குரூப்பைச் சேர்ந்த விஜயப்ரியா நித்தியானந்தா என்பவர் பேசியது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக தாங்கள் பேசவில்லை என்றும் இந்து விரோத சக்திகளுக்கு எதிராகத்தான் பேசியதாகவும் விஜயப்பிரியா பின்னர் வீடியோ விளக்கம் அளித்தார்.


"எப்பவும் எனக்குத்தான்".. காதலியுடன் கலக்கல் போட்டோ வெளியிட்ட.. வீராங்கனை டேனியல் வியாட்!


இந்த நிலையில் கைலாசா குரூப், அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் ஒப்பந்தம் செய்ததாக முன்பு ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில்அந்த ஒப்பந்தத்தை நெவார்க் நகர நிர்வாகம் தற்போது ரத்து செய்து விட்டது.  இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம்  என்று நெவார்க் நகரம் கூறியுள்ளது. ஜனவரி 12ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.  நெவார்க் நகரின் சென்டிரல் ஹாலில் வைத்து நித்தியானந்தா டீம் உறுப்பினர்களுடன் நெவார்க் நகர பிரதிநிதிகள் "சிஸ்டர் சிட்டி" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதைத்தான் தற்போது நெவார்க் நகரம் ரத்து செய்துள்ளது.


இதுகுறித்து நெவார்க் நகர தொடர்புத்துறை  செய்தித் தொடர்பாளர் சூசன் காராபோலோ கூறுகையில், கைலாசாவைச் சுற்றி நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து நெவார்க் சிட்டி மேற்கொண்ட நடவடிக்கையை ஜனவரி 18ம் தேதியே ரத்து செய்து விட்டோம்.  இது தேவையில்லாத, அடிப்படை இல்லாத ஒரு நிகழ்வு. வருத்தத்திற்குரியது.



சிஸ்டர் சிட்டி   கலாச்சாரத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற  நாங்கள் விரும்பவில்லை.  இதுபோல இனி நடக்காது என்றார் அவர்.


சர்வதேச கவனத்தை ஈர்க்க கடுமையாக பிரயத்தனம் செய்து வருகிறார் நித்தியானந்தா. அதன் நடவடிக்கையாகவே இதுபோன்ற விவகாரங்களில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால்  தொடர���ந்து தோல்வியையே நித்தியானந்தா குரூப் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்