நாம் தமிழர் கட்சி.. நிர்வாகிகள் வீட்டில்.. என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. என்ன காரணம்?

Feb 02, 2024,10:47 AM IST

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு நிதி வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டவற்றின் ரெய்டுகளும் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளன. 


தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. யாருடனும் அது சேருவதில்லை. அதை பாஜக பி டீம் என்றுதான் திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக வாக்குகளைப் பிரிக்கவே நாம் தமிழர் கட்சியை  பயன்படுத்துவதாகவும் கூட திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் ஏற்கனவே அறிவித்து விட்டார். 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.




இந்த நிலையில் இன்றைய பொழுந்து நாம் தமிழர் கட்சிக்கு சோதனைப் பொழுதாக அமைந்து விட்டது. அதாவது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ரெய்டு நடத்தியுள்ளனர். 


கோவையில் 2 இடங்களிலும், சென்னை, திருச்சி, சிவகங்கை, மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடந்துள்ளது.  நாம் தமிழர் கட்சியில் முக்கிய  பதவியில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர் திருச்சி சண்முகாநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சாட்டை துரைமுருகன் என்ற பெயரில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மூலமாக நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சண்முகா நகரில் உள்ள சாட்டை துரைமுருகன்  வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர்.


வீட்டில் துரைமுருகன் இல்லை. அவரது மனைவி மாதரசியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சாட்டை துரைமுருகனை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர் அதிகாரிகள்.


நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது.. தனிப்பட்ட முறையில் சாட்டை முருகனுக்கு எவ்வளவு பணம் வருகிறது.. எந்த நாடுகளில் இருந்து பணம் வருகிறது..  யார் மூலமாக பணம் கிடைக்கிறது.. என்பது பற்றிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்த சோதனையில், ஒன்று காளப்பட்டி முருகன் வீட்டில் நடந்தது. இவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான்.   சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு செல்போன் 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதேபோல நாம் தமிழர் கட்சியின் இன்னொரு முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தியையும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது ஊரில் இல்லாததால், 5ம் தேதி விசாரணைக்கு வருவதாக கார்த்தி பதில் கொடுத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இன்று நடந்த அதிரடி சோதனை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்