சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக நீலகிரி மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 19 மாநகராட்சிகளுடன் பல்வேறு ஊராட்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டு அவற்றின் எல்லைகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 19 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த மாநகராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைக்கத் திட்டமிட்டு அதுகுறித்த திட்டம் வெளியாகியுள்ளது.

மொத்தம் 5 நகராட்சிகள், 45 பேரூராட்சிகள் மற்றும் 460 ஊராட்சிகளை இந்த 19 மாநகராட்சிகளுடன் அரசு இணைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான விவரம்:
19 மாநகராட்சிகளுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை:
4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள்
மாநகராட்சி வாரியாக இணைக்கப்படும் ஊராட்சி அமைப்புகள் குறித்த விவரம்:
தாம்பரம் - 18 ஊராட்சிகள்
காஞ்சிபுரம் - 11 ஊராட்சிகள்
நாகர்கோவில் - 6 ஊராட்சிகள்
கரூர் - 6 ஊராட்சிகள்
ஓசூர் - 9 ஊராட்சிகள்
மதுரை - 1 பேரூராட்சி, 13 ஊராட்சிகள்
கோயம்பத்தூர் - 1 நகராட்சி, 4 பேரூராட்சி, 11 ஊராட்சிகள்
கடலூர் - 16 ஊராட்சிகள்
திண்டுக்கல் - 10 ஊராட்சிகள்
ஈரோடு - 7 ஊராட்சிகள்
சேலம் - 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகள்
கும்பகோணம் - 13 ஊராட்சிகள்
தஞ்சாவூர் - 14 ஊராட்சிகள்
தூத்துக்குடி - 7 ஊராட்சிகள்
திருச்சிராப்பள்ளி - 38 ஊராட்சிகள்
திருநெல்வேலி - 12 ஊராட்சிகள்
திருப்பூர் - 12 ஊராட்சிகள்
ஆவடி - 3 நகராட்சிகள், 19 ஊராட்சிகள்
சிவகாசி - 9 ஊராட்சிகள்
இதுதவிர 50 நகராட்சிகளுடன், 13 பேரூராட்சிகளும், 195 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாநகராட்சி உதயம்
இதுதவிர 17 மாவட்டங்களில் உருவாக்கப்படவுள்ள புதிய நகராட்சிகளில் 24 பேரூராட்சிகளும், 24 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 26வது மாநகராட்சியும் விரைவில் உதயமாகவுள்ளது. அதன்படி, மலை மாநகரமான ஊட்டி புதிய மாநகராட்சியாகிறது. ஊட்டி மாநகராட்சி அல்லது நீலகிரி மாநகராட்சி என்று இதற்கு பெயர் சூட்டடப்படும். இதில் 1 நகராட்சி, 1 பேரூராட்சி மற்றும் 4 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.
ஊராட்சி அமைப்புகள் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பிறகு 19 மாநகராட்சிகளின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு விவரம்:
கோயம்பத்தூர் - 18,07,605 - 438.54 சதுர கிலோமீட்டர்
மதுரை - 16,86,293 - 214.39
திருச்சிராப்பள்ளி - 11,62,270 - 410.29
தாம்பரம் - 10,08,473 - 172.34
திருப்பூர் - 10,02,042 - 302.87
சேலம் - 9,13,120 - 211.35
ஆவடி - 6,95,212 - 188.51
திருநெல்வேலி - 5,66,539 - 204.08
ஈரோடு - 5,60,422 - 165.61
தூத்துக்குடி - 4,29,455 - 180.83
திண்டுக்கல் - 3,31,548 - 127.66
நாகர்கோவில் - 3,25,950 - 96.45
தஞ்சாவூர் - 3,13,345 - 121.97
ஓசூர் - 2,98,164 - 173.78
காஞ்சிபுரம் =- 2,84,561 - 112.40
சிவகாசி - 2,70,006 - 121.80
கரூர் - 2,63,795 - 125.56
கும்பகோணம் - 2,31,340 - 43.16
கடலூர் - 2,09,662 - 82.82
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}