"சில இரவுகளில் என் விரல்கள்".. மிரள வைக்கும் நிமிஷா சஜயனின் ஜிலீர் கவிதை!

Apr 01, 2023,04:45 PM IST
திருவனந்தபுரம்: நிமிஷா சஜயன்.. மலையாளத் திரையுலகின் சூப்பர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்.. வித்தியாசமான கேரக்டர்களில் அனாசயமாக நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா.. சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் எழுதும் வரிகள், வரையும் ஓவியங்கள்  பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பிக் கொண்டஉள்ளன.

தொண்டிமுதலும் திரிக்ஷக்சியும் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் நிமிஷா. சோழா மற்றும் ஒரு குப்ரசித பய்யன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.  2 முறை பிலிம்பேர் விருதுகளும், 3 முறை சைமா விருதும் பெற்றவர்.



தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், ஈடா  ஆகிய படங்கள் இவரது நடிப்புத் திறமைக்கும் மேலும் சில உதாரணங்கள். நயட்டு படத்தில் அட்டகாசமான கேரக்டரில் கலக்கியிருப்பார். அதேபோல ஒரு தெக்கன்தள்ளு கேஸ் படத்திலும் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். 

நிமிஷா சஜயன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராமில் பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.  நிர்வாண ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். கூடவே அதில் கவிதை வரிகளையும் இணைத்து விடுகிறார். கவிதை வரிகள் என்றால் சாதாரணமானவை அல்ல.. .ஹாட்டான அனல் பறக்கும் காதல் + காமக் கவிதைகளாக அவை உள்ளன. 

அவர் எழுதிய கவிதைகளில் உதாரணத்திற்கு ஒன்று...

சில இரவுகளில்
எனது விரல்கள்
உரோமங்களுக்கும், தொடைகளுக்கும் இடையே ஊர்ந்து செல்கின்றன.
கண்கள் மூடிக் கிடக்கிறேன்
தலை முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது!

இந்தக் கவிதை பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பியுள்ளது. நிமிஷாவுக்கு என்னாச்சு என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் பலர் இவரது போல்டான கவிதைகளுக்கும், ஓவியங்களுக்கும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

அம்மா எனும் காதல்!

news

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. அழகான உறவின் அடையளம்.. அண்ணன் தங்கை!

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்...தீவிரடையும் விசாரணை

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

அழியா காதலில் நீயும் நானும்

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

காலம் பொன் போன்றது

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

அதிகம் பார்க்கும் செய்திகள்