ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி

Jan 05, 2026,05:03 PM IST

சென்னை: திமுக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருத்துக்கணிப்பு எல்லாம் ஒன்றுமே இல்லை. புதிதாக வரும் சக்தியை யாராலும் கணிக்க முடியாது. 70 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றம் நடக்கும். தவெக தலைவர் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டணி தொடர்பான அறிவிப்பை தலைவர் தான் அறிவிப்பார்.




தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு ஏமாற்று வேலை. எப்போது அமல்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த தேதி என்று இல்லை. தேர்தலில் வாக்குறுதி கொடுத்த மாதிரி இப்போதும் கொடுத்துள்ளார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதானே தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்? இதுதான் பழைய ஓய்வூதியமா?. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுபவர்கள் தான் திமுகவினர். அரசு ஊழியர்களை மாய வலையில் சிக்க வைத்துள்ளனர். 


ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் பல வாரங்களுக்கு முன்பே பரிந்துரைத்த நிலையில் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. கடந்த 10ம் தேதியே தணிக்கைக்குழு  படத்தை பார்த்துவிட்டது. தடைகள் பல வரலாம். அனைத்தையும் தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்