சென்னை: சினிமாவைப் பாருங்கள்.. வில்லன்கள் எல்லோருமே பெரும்பாலும் உயர் ஜாதி இந்துக்களாக இருப்பார்கள். ஹீரோக்கள் இந்துக்கள் அல்லாதவர்களாக இருப்பார்கள். இது இந்து துவேஷ போக்கு என்று சர்ச்சை சாமியார் நித்திாயனந்தா கூறியுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வசித்து வருவதாக அவரது சமூக ஊடக பதிவுகள் கூறுகின்றன. இந்த கைலாசா தீவு எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் நித்தியானந்தா பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்கா பக்கம் ஏதாவது ஒரு தீவுப் பகுதியில் நித்தியானந்தா தனது டீமோடு ஸ்டே பண்ணியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் நித்தியானந்தா டீம் அவ்வப்போது போட்டு வரும் டிவீட்டுகள் அதிர வைக்கின்றன. ஐ.நா. சபையில் பேசுகிறார்கள். அமெரிக்க நகரத்துடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போடுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தா ஒரு டிவீட் போட்டுள்ளார். இது சினிமாக்காரர்களை குறி வைத்துப் போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கில கேப்பிடல் லெட்டரில் எழுதப்பட்டுள்ள இந்த டிவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்துப் படங்களையம் பார்த்தால் நமக்கு ஒன்று தெளிவாகப் புரியவரும். 90 சதவீத படங்களில் வரும் வில்லன்கள் எல்லோருமே இந்து அடையாளங்களுடன்தான் இருப்பார்கள். அதாவது விபூதி, குங்குமம், காவி உடை அணிந்து இருப்பார்கள். பெரும்பாலும் பிராணப் பெயர்கள்தான் அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். அதாவது சர்மா, அய்யர், திரிவேதி போன்ற பெயர்கள், இவை எல்லாம் மேல்ஜாதிப் பெயர்கள். அதேசமயம் ஹீரோக்களைப் பார்த்தால் அவர்கள் இந்து அல்லாதவர்களாக இருப்பார்கள். இந்து அலலாதோர் எல்லோம் ரொம்ப எளிமையானவர்கள் போல சித்தரித்திருப்பார்கள். அதேசமயம், இந்துக்களை சாத்தான்கள் போல சித்தரித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இந்த டிவீட் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இதை வைத்து டிவிட்டராட்டிகள் பலர் கலாய்த்து கலகலப்பைக் கூட்டி வருகின்றனர். சிங்கம் களம் இறங்கிருச்சு என்று ஒருவர் கிளப்பி விட, தலைவா என்று ஒருவர் புளகாங்கிதம் அடைந்துள்ளார். நீங்கதான் சார் ரியல் ஹீரோ என்று ஒருவர் சல்யூட் வைத்து விட்டுப் போயுள்ளார்.
மொத்தத்துல (சினிமாக்காரர்களுக்கு) "வச்சாம் பாரு ஆப்பு"... அப்படின்னுதான் சொல்லத் தோணுது!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}