சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பால் தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம் என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை நிவேதா தாமஸ் பேசியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல விஜய்யுடன் ஜில்லா படத்தில் அவரது தங்கச்சியாக நடித்திருப்பார்.
இவர் நடித்த '35 சின்ன கதை காடு' என்ற திரைப்படம் வருகிற 6ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தது. இது பல பேர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது நிவேதா தாமஸ் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் கவலையை அளிக்கிறது. பெண்கள் அமைப்பால் தான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. எந்ந துறையில் பெண்கள் வேலை பார்த்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கு அவசியம் முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டில் இருப்பதை விட பெண்கள் அதிக நேரம் பணியிடங்களில் தான் செலவழிக்கிறோம். ஹேமா கமிட்டி போல் மற்ற சினிமா துறையிலும் வந்தால் நல்லது என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}