சண்டிகர்: பள்ளிகளில் Good Morning, Good Afternoon-க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் ஹரியானா பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்களின் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களும் Good Morning, Good Afternoonக்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூற வேண்டும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் அனுப்பிய சுற்றறிக்கையில், தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இனி பள்ளிகளில் காலை குட் மார்னிங்க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது மாணவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படும் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ஜெய் ஹிந்த் முழக்கம் பிராந்திய மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையைக் குறிக்கிறது.இந்த புதிய வாழ்த்து மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாடு இந்திய வரலாற்றின் மீதான மரியாதை, அவர்களின் அடையாளம் மற்றும் தேசத்திற்கு சாத்தியமான பங்களிப்பையும் தினசரி நினைவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
தேசத்தை கட்டி எழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}