ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹோப்ஃபீல்ட் மற்றும் ஜியோஃபிரை இ.ஹின்டன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆப் சையின்ஸ் அறிவித்துள்ளது.
செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல் முறைகளை தெரிந்து கொள்ளும் முறையை கண்டுபிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவரும் பேராசிரியர்களாக உள்ளனர்.

2024ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 07ம் தேதி துவங்கி, அக்டோபர் 14ம் தேதி வரை அறிவிக்கப்பட உள்ளன. இந்த பரிசின் மொத்த மதிப்பு 11 மில்லியன் ஸ்வீடிஸ் க்ரோன்கள். அதாவது 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.3 கோடி ஆகும். 1901ம் ஆண்டு முதல் நோம்பல் கழகத்தால் ஒவ்வொரு துறையிலும் சிறப்பு பங்களிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று இயற்பியலுக்கான பரிசும், புதன்கிழமை வேதியியலுக்கான பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்திற்கான பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான பரிசும், இறுதியாக அக்டோபர் 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு வென்றவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
வங்கதேச மக்களுக்காக... 17 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கிய முன்னாள் பிரதமரின் மகன்!
போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !
ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone
ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?
அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!
{{comments.comment}}