சென்னை: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா 3210 மாடல் மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக எச்எம்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் போன் என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் சொல்வது நோக்கியா போன் தான். மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் மிகவும் பிரபலமாக இருந்த போன் தான் நோக்கியா 3210. இந்த போனுக்கு என்றே நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். எதற்காக இந்த மாடல் போன் மக்கள் மத்தியில் விருப்பப்பட்டது என்று தெரியுமா?
இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும். 22 மணி நேரம் பேசும் அளவிற்கு சார்ஜ் இருக்கும். அதுமட்டுமின்றி 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபலமான சினேக் என்ற கேம்ஸ் இதில் உண்டு. மேலும், இந்த போன் கைக்கு அடக்கமாகவும், கீழே விழுந்தாலும் உடையாமலும் இருக்கும் என்ற பல காரணங்களால் இந்த போனை பெரும்பலானவர்கள் விரும்பி வாங்கி வந்தனர்.
இந்த நோக்கியா 3210 மீண்டும் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வர உள்ளது. புது வரவில் 4ஜி, புளூடூத், புதுப்பிக்கப்பட்ட ஸ்னேக் கேம்ஸ் ஆகியவை இருக்குமாம். இந்த போன் ரூ. 3210க்கு விற்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூடுதல் வசதிகளுடன் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளதாம். இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
நோக்கியா 3210 போன் முதன் முதலில் அறிமுகமானது 1999ம் ஆண்டு. செல்போன்கள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து கொண்டிருந்த காலம். இப்போது போன்ற வசதிகள் இல்லாத காலம். அப்போது வந்த இந்த 3210 போன் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. இந்த போன் வைத்திருந்தால் தனி மதிப்பு கிடைத்தது. அந்த அளவுக்கு பலரையும் ஈர்த்த சூப்பர் போன் இது. இந்த போன் இப்போது கூடுதல் சிறப்புகளுடன் மீண்டும் வருவது செல்போன் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
{{comments.comment}}