சென்னை: திமுக கூட்டணியை மக்கள் கைவிட்டார்கள் என்பதை விட அது இந்த முறை அமைத்த கூட்டணிதான் கை விட்டுள்ளது. காரணம், ஈகோ, பிடிவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட்டணிக் கட்சிகளே, காலை வாரி விட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுதவிர மூத்த தலைவர்களின் அதிருப்தி, உட்கட்சிப் பூசல், திமுக அமைச்சர்கள் பலர் மீதான கடுமையான புகார்கள், திமுகவினரின் செயல்பாடுகள், தேவையில்லாத பேச்சுக்கள் என பல காரணங்களை திமுக கூட்டணியின் வீழ்ச்சிக்கு காரணங்களாக அடுக்கலாம்.
உண்மையில் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை திமுக ஆட்சி செய்திருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதையும் தாண்டி கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது, விஜய்யை குறி வைத்து கேவலமாக பேசியது, தரக்குறைவாக அவரை குறைத்து எடை போட்டது என பல காரணங்களால் அந்த அருமையான விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டது.

காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் ஆரம்பத்திலிருந்தே மன ஒற்றுமை இல்லாமல் போய் விட்டது. காங்கிரஸ் தவெக பக்கம் போகப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் பொருந்தாத் திருமணம் போலவே இந்தத் தேர்தலை திமுக காங்கிரஸ் சந்தித்தன. திமுகவும், காங்கிரஸும் இணைந்து அதாவது முதல்ர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியும் சேர்ந்து பிரச்சாரம் செய்யவே இல்லை. இது ஒரு பெரும் முரண்பாடு. இப்போது காங்கிரஸ் சிங்கில் டிஜிட்டில்தான் வெல்லும் சூழல் உள்ளது.
அதேபோல தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளைக் கொடுக்க திமுக காட்டிய பிடிவாதம் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் கடும் அதிருப்தியைக் கொடுத்து விட்டது. யாராலும் சீண்டப்படாத, பலமிழந்து நிற்கும் தேமுதிகவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் தேமுதிகவுக்கு விசிக உள்ளிட்ட பல கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அந்தக் கட்சி சார்பில் விஜய பிரபாகரன் மட்டும் வெல்லும் நிலையில் உள்ளார்.
இடதுசாரிகளும் கூட போதிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதை பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தனர்.
இதை விட முக்கியமாக விசிகதான் கடும் அதிருப்தியில் இருந்தது. திருமாவளவனை விட அவரது கட்சியினர்தான் திமுக மீது கடும் காட்டமாக இருந்தனர். 2 சீட் கூடுதலாக கொடுக்க திமுக பிடிவாதமாக மறுத்தது அவர்களது ஈகோவை தொட்டு விட்டது. இதன் விளைவு, தேர்தலில் சரிவர அவர்கள் பணியாற்றவில்லை. இதை திருமாவே சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
மெகா கூட்டணியாக வர்ணிக்கப்பட்ட திமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது வியப்பை அளிக்கிறது. காரணம், இதே கூட்டணிதான் கடந்த காலங்களில் பல வரலாறுகளைப் படைத்தது. தொடர்ந்து வென்றும் வந்தது. இன்று புதிதாகப் பிறந்த ஒரு கட்சியினரும், 75 ஆண்டு கால வரலாறு கொண்ட திமுக, எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்குப் பின்னடைவைச் சந்தித்திருப்பது திராவிட இயக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சி செய்தியாக வந்துள்ளது.
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
மயக்கமும் தயக்கமும்
பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!
காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
{{comments.comment}}