டில்லி : இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்கனவே கனமழை பெய்து வருகிறது. இதில் மும்பை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்டுப் பணிகள் ஒரு வாரமாக நடந்து வருகிறது. அங்கும் இன்னும் மழை, வெள்ளம் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மழை எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய தகவலின் படி, வடகிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக மேற்கு மத்திய பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய இந்தியா பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், ராஜஸ்தான், உத்தகர பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் இந்த வாரம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 6 ம் தேதி வரை மேற்கு ராஜஸ்தானில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் உத்திரகாண்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்டெ 04ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரத அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 05ம் தேதி கொங்கன், கோவா ஆகிய பகுதிகளிலும் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}