சென்னை: கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று மத்திய அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் ஓமன் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.சென்னை உள்ளிட்ட 9 வட மாவட்டங்களுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்திற்கு தடை, மண் சாலைகளில் பாதிப்பு, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு, மண் சரிவு ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையாக வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}