பூசாரிகள்தான் ஜாதியை உருவாக்கினார்கள்.. கடவுள் அல்ல.. சொல்கிறார் மோகன் பகவத்

Feb 06, 2023,10:46 AM IST
மும்பை: நாட்டு மக்கள் அனைவரின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதில் எந்த வேறுபடும். கருத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஜாதியை உருவாக்கியது கடவுள் அல்ல..  பூசாரிகள்தான் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.



மும்பையில் துறவி சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன்  பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது வாழ்க்கைக்காக இந்த சமூகத்திடமிருந்து சம்பாதிக்கிறோம். அதேபோல இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக உள்ளபோது, அதில்  பெரிது என்றும் சிறிது  என்றும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.?

நம்மைப் படைத்தவனுக்கு நாம் ஒன்றுதான். சமமானவர்கள்தான். இங்கு ஜாதியும் கிடையாது, பிற பிரிவினைகளும் கிடையாது. இந்தப் பிரிவினையெல்லாம் பூசாரிகள் செய்தது. அது தவறானது. கடவுள் இதைச் செய்யவில்லை. நாட்டின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒன்றாகவே உள்ளது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்