- அ.சீ. லாவண்யா
கைக்குள் கோப்பை தேநீர்,
வெளியில் நனைந்து வரும் மழை வாசம்-
இரண்டு மணமும் ஒரு சேர மணக்கும்!
மே மாத காலத்தில் வரும் கோடை விடுமுறையை வென்று விடுகிறது
இந்த நவம்பர் மாத மழை விடுமுறை!

80ஸ் 90ஸ் பாடல்கள் வானொலியில் ஒலிக்க, நிலத்திலே விழும் ஒவ்வொரு துளியும் ஒரு ராக தாளமாய் மாறும்!
இது ஒரு வருடம் தேக்கி வைத்திருந்த பாரம்..
மண்ணில் ஒரே மாதத்தில் மழையாய் பெய்து தீர்த்து விடுகின்றது மேகம்
மழையோ மேகத்தை பிரிந்த துயரத்தில் கீழே விழுகிறதாம்
எப்போது உன்னை பார்ப்பேன் என்று !
மண்ணின் முதல் மனம்
காற்றின் ஓசை
பறவைகளின் ஒலிகளை
வைத்து கண்டுபிடித்திடலாம்
ஒ.. நம்மை மகிழ்விக்க
மழை வருகை என்று!
நிம்மதியாக சும்மா அமர்ந்திருக்கும்
அந்த அமைதி எல்லாம் நவம்பர் மாதத்துக்கே சொந்தம் என்று!
நவம்பருக்கே சொந்தமாம் இந்த வரமான மழை
ஆனால் அகம்பாவம் பிடித்த நவம்பரே
உனக்கு மட்டுமா அது சொந்தம்
இதோ எனக்கும்தான் அது பந்தம் என்று..
கட்டியம் கூறியபடி 1ம் தேதியே வந்து
நிற்காமல் ஊற்றி உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறது டிசம்பர்!
மழை என்பது ஒரு பருவம் அல்ல, ஒரு உணர்வு!
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}