இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

Feb 26, 2025,05:25 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. அதாவது புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதியை தருவோம் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவில் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளராக பணிபுரிந்து வந்த, நடிகை ரஞ்சனா நாச்சியார் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 




அதில் எனக்கென்று ஒரு இயக்கம் எனக்கென்று ஒரு கழகம் பெண்ணின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை இனி எதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்க துவங்கி விட்டேன். இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம் அது எழுச்சிப் பயணம் வருங்காலங்களில் இனி அது வெற்றிப் பயணம்.. என கூறியிருந்தார். அப்போதே கணித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.வெற்றிப் பயணம் என ரஞ்சனா நாச்சியார் குறிப்பிட்டது ஒருவேளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய விரும்புகிறாரோ என தகவல் வெளியானது.


இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியதாவது, 


தமிழக வெற்றி கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 


நான் மொழிக்கு எதிரி கிடையாது. ஆனால் இந்தி தான் கத்துக்க வேண்டும் என்ற நிலைமையில் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது தமிழகத்தில் குழந்தைகளுக்கு அது அவசியம் இல்லாத ஒன்று. மொழி என்பதை கற்றுக் கொள்ளலாம். இரண்டு வாரங்களில் படித்தால் ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம். ஒரு பாடமாக கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. கிரெடிட் கார்டு வேணாம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள் இலவசமாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது திணிப்பது தானே. அதைத்தான் நான் கூறுகிறேன்.


இனி தளபதி அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் தான் தமிழ்நாட்டின் வெற்றி களமாக மாறப்போகிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஒன்றரை கோடி தொண்டர்கள் இதில் இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இதற்கு மேல் இன்னும்  சிறப்பாக தான் இருக்கும். களம் இனிமேல் தான் சூடு பிடிக்கப் போகிறது. அடுத்த பத்து மாத காலங்களில் தேர்தலை நோக்கி செல்ல இருக்கின்றது. விறுவிறுப்பாக இருக்கப் போகிறது. எதிர்பார்க்கலாம். 


தளபதி விஜயின் கட்சியில் தேசியமும் திராவிடமும் எனக்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பி தான் இணைகிறேன். பெண்கள் பாதுகாப்பிற்காக தளபதி அவர்கள் எந்த எல்லை வரைக்கும் சென்று உறுதுணையாக இருப்பார். அதில் பெண்களுக்கு ஒரு குரலாக நானும் ஈடு கொடுக்க வேண்டும் என்று நான் இணைந்து இருக்கிறேன் என பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!

news

பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!

news

சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!

news

ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

news

அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!

news

சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி

news

மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்