வேலை பிடிக்கலையா.. ஊழியர்களிடையே.. வேகமாகப் பிரபலமாகும் Rage Applying!

Jan 17, 2023,12:28 PM IST
மும்பை: உலகமெங்கும் உள்ள ஐடி ஊழியர்களிடையே ஒரு விதமான விரக்தி நிலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்கள் பல்வேறு உத்திகளில் இறங்குவதும் அதிகரித்து வருகிறது.



வேலை பார்க்கும் இடத்தில் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை.. நல்ல ஊதியம் தருவதில்லை.. ஆட்குறைப்பு ஒருபக்கம்.. வேலைப்பளு அதிகமாக இருப்பது மறுபக்கம்.. உள்ளுக்குள் நிலவும் பாலிட்டிக்ஸ் என பல்வேறு காரணிகளால் பணியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்குள்ளாகும் நிலை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக ஐடி ஊழியர்கள் quiet quitting எனப்படும் "கடனுக்கு வேலை பார்க்கும் முறை"யை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்வது, அதற்கு மேல் எக்ஸ்ட்ராவாக எதையும் செய்வதில்லை.. கரெக்டாக வேலை முடிந்ததும் கிளம்பிப் போவது.. இதுதான் quiet quitting என்பதாகும். இது பல்வேறு ஐடி நிறுவனங்களில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதேபோல Moon lighting முறையும் ஊழியர்களிடையே அதிகரித்து வருகிறது. மூன்லைட்டிங் என்பது ஒரு வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக இன்னொரு வேலை பார்ப்பது. இதை ஐடி நிறுவனங்கள் பல தடை செய்துள்ளன. யாராவது மூன்லைட்டிங் செய்தால் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவை எச்சரித்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இன்னொரு டிரெண்ட் உருவாகியுள்ளது. இதை rage applying என்று சொல்கிறார்கள். ஒரு வேலை பிடிக்காவிட்டால், பல்வேறு வேலைகளுக்கு சரமாரியாக விண்ணப்பிப்பது.. எது கிடைத்தாலும் அதைச் செய்வது என்று இதற்கு அர்த்தமாம். இதை ஒரு பெண்தான் பிரபலமாக்கியுள்ளார். அவர் கனடாவைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், எனக்கு நான் தற்போது பார்த்து வரும் வேலை பிடிக்கவில்லை. கடுப்பாகி விட்டேன். எனவே பல்வேறு நிறுவனங்களுக்கும் நான் அதிரடியாக பயோடேட்டாவை அனுப்பி விட்டேன். மொத்தம் 15 நிறுவனங்களுக்கு அனுப்பினேன்.  அதில் ஒரு நிறுவனம் எனக்கு தற்போது வாங்கி வரும் சம்பளத்தை  விட 25,000 டாலர் அதிகமாக கொடுத்து எடுத்துக் கொள்வதாக கூறியது. நல்ல இடமும் கூட. என்னைப் போலவே நீங்களும் தற்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லாவிட்டால் பல வேலைகளுக்கு முயற்சியுங்கள்.. கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்தது கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதுதான் இப்போது பாப்புலராகியுள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்