சென்னை: சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று ரிப்பன் மாளிகை. இந்த கட்டிடத்தை சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கட்டிடங்களில் 111 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ரிப்பன் மாளிகை ஆகும். இந்த மாளிகை 1896ம் ஆண்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. 1913ம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது என்று கூறப்படுகிறது. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயர் இந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்டது என்பதும், கடந்த 2012ம் ஆண்டு இது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ரிப்பன் மாளிகை செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை 279 அடிநீளமும், 105 அடிஅகலமும், 141 அடி உயரமும் கொண்டது. கட்டடத்தின் முதல் 3 தளங்களும் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 8.2 அடியாகும். இந்த மாளிகையில் அமைந்துள்ள ஏராளமான சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்தை சுற்றி பார்க்க விரும்புவோர் commcellgcc@gmail.com என்ற இமெயில் முகவரி அல்லது 94451-90856 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபராகவோ அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூலமாகவும் அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகை இது தற்போது மாநகராட்சி தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் சுற்றிப் பார்க்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Today Gold Silver Rate:நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று உயர்வு... அதுவும் சவரனுக்கு ரூ.1,600!
அயோத்தி ராமர் கோவிலில் தர்மதுவ ஜா ரோஹணம்!
{{comments.comment}}