வேலூர்: இனி வேலூரில் இருந்து மைசூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வப்போது பல்வேறு வசதிகள், புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை பயணிகள் நலனுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தற்போது வேலூரில் இருந்து மைசூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இனி மைசூருக்கு செல்வது எளிமையாகியுள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரில் இருந்து மைசூருக்கு குளிரூட்டப்பட்ட படுக்கை மற்றும் இருக்கை வசதி உள்ள பேருந்து ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலோ அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}