சென்னை: . கலையை போற்றலாம், கலைஞர்களை கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது ரொம்ப கொடுமையான போக்காக மாறி வருகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,
ஆன்றோர்களும் சான்றோர்களும் தமிழினத்தை ஆண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என பாடுபட்டு வருகிறோம். தற்போது இது வுஏறு பக்கம் திசை திரும்புகிறது. தமிழ் சினிமா எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை. கலையை போற்றலாம், கலைஞர்களை கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது ரொம்ப கொடுமையான போக்காக மாறிவிடும்.

அதனை வருங்கால தலை முறையினர், அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நினைக்கும் பொழுது தற்போதைய நிலை கண்டு ஒரு நடுக்கம் வருகிறது. ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை? நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு? நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சினிமா உள்ளது. ஆனால் எந்த ஒரு மாநிலத்தில் நிகழாத விபத்து தமிழகத்தில் நடந்திருக்கிறது.
திரை கவர்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் தமிழ் இனம் விழிப்புற்று ஏழ வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல், முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவது விஜயின் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}