ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்து விட்டது .. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

Feb 23, 2023,12:06 PM IST
மதுரை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம், தீர்மானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்போடு, ஓபிஎஸ்ஸின் அரசியல் முடிந்து போய் விட்டது என்று கூறியுள்ளார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.



அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஓ.பி.எஸ்   தரப்புக்கு பேரதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் மகள் மற்றும் 51 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், இன்றைக்கு உச்சநீதிமன்றத்திலிருந்து அற்புதமான தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று வந்துள்ளது. இது நல்ல தீர்ப்பு. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. 




ஓன்றரை கோடி அதிமுகவினருக்கும் இது மிகப் பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. தீர்ப்பு முடிந்தது.. அவரது அரசியலும் முடிந்து போய் விட்டது. இனி அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக இனி எழுச்சியோடு  கட்சிப் பணி ஆற்றும்.  அவர்கள் சிவில் கோர்ட் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்சநீதிமன்றம்தான் இறுதியானது.  அங்கேயே சொல்லப்பட்டு விட்டது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இரவெல்லாம் தூங்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி உருக்கம்

முன்னதாக திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, திருமணத்திற்கு வருவதற்கு முன்பு நான் அம்மா கோவில் சென்றேன். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை வணங்கியபோது,  இன்று நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று மனம் உருக பிரார்த்தித்தேன். இதோ நல்ல செய்தி வந்து விட்டது. நான் தீர்ப்பை எண்ணி கலங்கிப் போயிருந்தன். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவித்தேன். தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

கடந்த 7 மாதமாக அதிமுகவினர் பட்ட வேதனைகள் எண்ணில் அடங்காதது. அதிமுகவை அழிக்க நினைத்த எட்டப்பர்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டனர். திமுகவின் பி டீம் தோற்றுப் போய் விட்டது. அவர்களது முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. 

நான் வணங்கியது எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் தெய்வங்களை.. அந்த  தெய்வ சக்தி படைத்த தலைவர்கள் கொடுத்த தீர்ப்பு இது.  எம்ஜிஆர் இயக்கத்தை தோர்றுவித்தபோது திமுக தீய சக்தி என்றார். அதனால்தான் அதிமுக தோற்றுவித்தேன் என்றார். இறுதி மூச்சு வரை திமுகவை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அதே வழியில் வந்த ஜெயலலிதா பல துயரங்கள், வேதனைகள், இன்னல்கள் இடர்பாடுகளை சகித்துக் கொண்டு எம்ஜிஆர் வழியில் நின்று வகுத்துத் தந்த பாதையில் சென்று தீய சக்தியை தமிழகத்தை ஒடுக்குவதற்கு அவருடைய ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டினார்.  அதே போல நாங்களும் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்