"இப்படித்தான் வெடிக்க வேண்டும் பட்டாசு".. வெடிச்சுக் காட்டிய அதிகாரிகள்.. மாணவர்கள் ஹேப்பி!

Nov 08, 2023,04:07 PM IST
- மஞ்சுளா தேவி

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது எப்படி ..? என பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு மீட்பு பணி நிலைய அதிகாரி ரவிமணி விளக்கிக் கூறினார்.

தீபாவளி என்றாலே புத்தாடை, மகிழ்ச்சி  நிறைந்த பண்டிகையாகத்தான் இருக்கும். அதுவும் பட்டாசு இல்லாமல் எப்படி .. தீபாவளிக்கு 10 நாளைக்கு முன்பே சின்னச் சின்னதாக வாங்கி வெடிக்க ஆரம்பிச்சுருவாங்க நம்ம குட்டீஸ்கள் எல்லாம். அது மாதிரி சந்தோஷம் வேற ஏது.. !



ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் அதிக புகையால் காற்றில் ஏற்படும் மாசு காரணமாகவும், விபத்துக்களை தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்கவும் ,பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.


மேலும்  தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் ,ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதை விட முக்கியமாக தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், பாதுகாப்பான தீபாவளி எப்படி கொண்டாடுவது என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை ஏற்றார். தீயணைப்பு  மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ரவிமணி கலந்து கொண்டு பேசும் போது,
பாதுகாப்பான பட்டாசு வெடிப்பது எப்படி.. பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும் என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தார். 



குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்றும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னணி தீயணைப்போர் வசந்தகுமார், காளீஸ்வரன், கண்ணன், ஆனந்த் ,சேது, ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை வழங்கினார். நாமும் அரசு வழங்கிய வழிகாட்டுதலின்படி பசுமை பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடித்து மகிழ்ச்சி பொங்க தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்..!!

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்