- எம்.கே.திருப்பதி
சிறப்பான ஆண்டு என்று
சீற முடியவில்லை என்றாலும்
வழமை போல் வாழ்த்தலாம்
வாய் நிறைய!
நாட்கள் 365ம்
நல்ல கவிதையாய்
நயம்பட தோன்றினாலும்
இலக்கண பிழையாய் சில வரிகள்
இருக்கத்தான் செய்தது!
எதுகை மோனைகள்
முதுகை காட்டியது!
இயைபு சற்று
இடம் மாறியது!

மொத்த மாதத்தில்
ஒத்த மாதம்
ஒத்தடம் கொடுத்தது!
உறங்கிக் கிடந்த
எழுத்துப் பசி
சூரியத் தாமரையாய்
சுள்ளன மலர்ந்தது!
சில மாநாட்டு சந்திப்பு
மனச்சுமை தீர்த்தது!
கிளர்ச்சியைக் கூட்டி
கீழடி ஈர்த்தது!
ஈராயிரம் ஆண்டுகள் முன்
இருந்த தமிழனின்
தங்கப் பயன்பாடு
நெஞ்சுக் கூட்டை
நெகிழச் செய்தது!
திடீர்நட்பு
தித்தித்தது
இலக்கியநட்பு
இறுமாப்பு கூட்டியது!
நாட்டு நடப்பை
நவிலப் போனால்
நாலும் நடந்தது
அதன் கூடவே
நாளும் நடந்தது!
தீ அவை போல்
தீயவை கண்டேன்!
நாட்டார் சபையில்
நல்லவும் உண்டேன்!
இந்தியப் பேரரசின்
எழுச்சி தெரிந்தது
உலகப் பேரரசுகள்
ஒரு சேர வாழ்த்தியது!
நெறியில்லா வரிக்கும்
சரி சொன்ன தேசம்
நரி கூட்டம் பார்த்து
உரக்க நகைத்தது !
அண்டை தேசத்தை
அடித்து துவைத்தது!
உலகின் குருவாய்
உச்சம் தொட்டது!
வலிய ராக்கெட்
வட்டப்பாதை கண்டது!
வகை வகையான ஏவுகணைகள்
வானில் அலைந்தது!
தேச உணர்வும் இந்த
நேசன் உணர்வே!
தேச வளர்ச்சியும்
என் வளர்ச்சியே!
புலிப்பாய்ச்சலின்
புதுப்பாய்ச்சல்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தென்றலே மெல்ல வீசு
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
மனசு மயங்கும்.. இதயம் நடத்தும்.. Inner Spark!
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!
என் இனிய வருடமே 2025!
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
மார்கழி திருவாதிரை நாளில் நடராசரின் தாண்டவம்!
{{comments.comment}}