டில்லி: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான கமர்ஷியல் சிலிண்டர்களின் விலையையும் ரூ.30 குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் 19 கிலோ கமர்ஷியல் மிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டு, ரூ.1646 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஜூலை 01ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கமர்ஷியல் சிலிண்டர் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. மே மாதம் ரூ. 19 குறைக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதர் ரூ.69.50 வரை குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

எதற்காக கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து இப்படி குறைக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்த சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சந்தை நிலவரம், பொருளாதார நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பு முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும் இந்த விலை குறைப்பால் வணிக துறையில் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும், சுமை குறைப்பையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உணவு வகைகளின் விலையையும் ஓட்டல் துறையில் இருக்கும் நிறுவனங்கள் குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த சிலிண்டர் விலை குறைப்பு வணிகத்துறையினர் மட்டுமின்றி, சாமானிய மக்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}