Jokes... உலகம் எப்ப அழியும்!!

Sep 03, 2023,02:59 PM IST

- மீனா


சென்னை: சன்டே வந்தாச்சு.. "நிற்பதுமே.. பறப்பதுவே.. ஊர்வதுவே" என்றுதான் பலருக்கும் பாடத் தோன்றும்.. அந்த அளவுக்கு சாப்பாட்டை ஒரு கை பார்க்கும் தினம் இன்று.


நல்லா சாப்டாச்சு.. அப்படியே வயிறு கூல் ஆகும் அளவுக்கு நாலு ஜோக்ஸ் படிச்சோம்னா ஜாலியாருக்கும்ல.. அதுக்குத்தான் இந்த குட்டி குட்டி ஜோக்ஸ்.. வாங்க படிச்சுட்டுப் போய் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுங்க.


உலகம் எப்ப அழியும்!




தோழி 1: என்  கணவர் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார் . என்னை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டார். அவ்வளவு பாசம் என் மேல.

தோழி 2: எப்படி சொல்ற?

தோழி 1: ஏன்னா நீதான் என் உலகம் என்று அடிக்கடி சொல்லுவாரு.

தோழி 2: அதனாலதான் நேத்து, உலகம் எப்போ அழியும் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தாரா.

செத்தான்டா சேகரு!


போங்கத்தே உங்க மகளை வந்து போடச் சொல்லுங்க!




மருமகள்: அத்தை ,நான் போட்டிருக்கிற இந்த டிரஸ் நல்லா இருக்குதா?

மாமியார்: நீ போடறத விட என் மகள் போட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

மருமகள்: அத்தை, இந்த கோலம் நான் தான் போட்டேன் நல்லா இருக்கா?

மாமியார்:   என் மகள் போட்டிருந்தா இன்னும் அழகா போட்டு இருப்பா. இப்படியே பேசிக்கிட்டு இருக்காம சாப்பாடு எடுத்து வை நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.

மருமகள்: சரிங்கத்த,எடுத்து வைக்கிறேன்.

மாமியார்:  மருமகளே குழாயில் தண்ணி வரல மோட்டார் போடு 

மருமகள்: போங்கத்த, நான்தான் எது போட்டாலும்  உங்க மகள் போட்டோ தான் நல்லா இருக்கும்னு சொல்றீங்க அதனால உங்க  மகளை வந்து போட சொல்லுங்க.

மாமியார்:😲


எப்படி இருக்கணும்.. "கம்பீரமா" இருக்கணும்!




அப்பா:  இப்போ  எக்ஸாம் எழுத முடியலைன்னா என்ன. அடுத்த முறை எழுதிக்கலாம் . கவலைப்படாத என்ன கஷ்டம் வந்தாலும் கம்பீரமா இருக்கணும்.

மகன்: சாரிப்பா.

அப்பா: சரி விடு இனிமேல் நான்  பார்க்கும்போது எல்லாம்  "கம்பீரமா" தான் இருக்கணும்.

மகன்: சரிப்பா.

அப்பா:  நான் வரும்போது போகும்போது உன் மகன் எதுக்கு கம்பில தண்ணியை ஊத்திக்கிட்டு இருக்கிறான். கம்பி  துருபிடிச்சுரும்ல.

மனைவி: நீங்கதான் சொன்னீங்களாம் நான் பார்க்கும் போது "கம்பி ஈரமா" இருக்கணுமுனு அதனாலதான்.

அப்பா: உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டா.


நாய் நன்றி உள்ளதும்மா





மனைவி: ஒரு நாய் வாங்கி அதுக்கு  நானே சமைச்சு சாப்பாடு போட்டு நல்லா வளக்கணும்னு ஆசையா இருக்குங்க.

கணவன்: நாய் நன்றி உள்ளதும்மா.

மனைவி: அதனால தாங்க  சொல்றேன் நாய் வளர்க்கணுமுனு.

கணவன்: அதனாலதான் நானும் சொல்றேன், நாய் நன்றி கெட்டது என்ற லிஸ்டில் சேர்ந்துவிடும் "பெருமை"யை உனக்கு வாங்கி கொடுத்து விடும். 

மனைவி:  எனக்கு எதுக்கு இந்த பெருமையை வாங்கி கொடுக்கும்??!

கணவன்:  பின்ன நீ சமைச்ச சாப்பாடு போட்டா உனக்கு  ஆஸ்கார் அவார்டா வாங்கி கொடுக்கும். 

மனைவி: 😡


சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்