எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

Dec 16, 2025,05:14 PM IST

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, லட்சக்கணக்காண வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஷ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றது. தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவு பெற்றது. டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி பேர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.




இந்த எஸ்ஐஆர் பணியின் போது, 26.90 லட்சம் இறந்தவர்கள், 3.98 லட்சம் இரட்டை பதிவு கொண்டவர்கள், 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்க  முடியாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்பட உள்ளனர். கடந்த அக்டோபர் மாத கணக்கின்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், 1 கோடி பேர் நீக்கப்படும் அபாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. 


சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் மொத்தமாக 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 15 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் 58 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. அதே போல புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்