மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
வாழ்க்கை முன்வைத்த சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதனை மனிதராக வாழ்ந்து மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் யார் என்று தெரியுமா?
21 வயதில் ஏ.எஸ்.எல் எனும் உடலியக்கத்தை முடக்கக் கூடிய கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, விடா முயற்சியுடன் வாழ்க்கையை தொடர்ந்தவர். காஸ்மாலாஜி தொடர்பான ஆய்வுகளுக்காக அறியப்பட்டவர். அவர் எழுதிய காலத்தின் சுருக்கமான அறிமுகம் புத்தகம் அறிவியல் வாசகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர்கள் அவர் இரண்டு ஆண்டுகளே வாழ்வார் என கூறியதை மீறி அவர் 76 வயது வரை வாழ்ந்தவர்.
ஸ்டீபன் ஹாக்கிங், ஜனவரி 8, 1942 அன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடங்கினார். 22 வயதில், அவருக்கு 'மோட்டார் நியூரான் நோய்' (ALS) இருப்பது கண்டறியப்பட்டது, இது அவரை மெல்ல மெல்ல உடல் இயக்கத்தை இழந்தது.
”சக்கர நாற்காலி துணையுடன் நடமாட வேண்டிய நிலை மற்றும் மென்பொருள் உதவியுடனே பேச முடியும் என்ற வரம்புகளை எல்லாம் மீறி அவர் இயற்பியல் ஆய்வை தொடர்ந்தார். அவரது ஊக்கம் தரும் வாழ்க்கை, தி தியரி ஆப் எவ்ரிதிங் எனும் பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. ஹாக்கிங் அறிவியல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுடன் அவரது நகைச்சுவை உணர்வும் மறக்க முடியாததாக அமைகிறது. மறைந்த மேதையை அவரது ரசிக்க வைக்கும் மேற்கோள்கள் மூலம் நினைவு கூறுவோம்.
2015-ல் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 75 வயது வரை வாழ்வேன் என நினத்துக்கூட பார்க்கவில்லை என்றும், தன் வாழ்க்கை பற்றி தானே நினைத்துப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.
ஊக்கமே உத்வேகம் என்றும்,வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் ஹாக்கிங் உடல் குறைபாடு, தனது கனவை நோக்கி கடினமாக உழைக்கத் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை. அறிவியல் ஆய்வில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு மற்றும் விடா முயற்சி, எத்தனை சோதனைகள் வந்தாலும் நம்பிக்கையுடன் நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
தனது அபார மன உறுதியால், " A Brief History of Time"போன்ற புத்தகங்கள் மூலம் அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவியது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐசக் நியூட்டன் வகித்த பதவியை வகித்தார். மனித வரலாற்றின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இந்த நோய் இருந்தபோதிலும், அவர் தனது ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, தனது வாழ்க்கையை அறிவியல் வளர்ச்சிக்கு அர்ப்பணித்தார்.
"அறிவியல் என்பது காரண காரியங்களை ஆராயும் துறை மட்டும் அல்ல, ஈடுபாடு மற்றும் காதலும் நிறைந்தது."
“இயற்பியல் மற்றும் கணிதம் அகியவை பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது நமக்கு புரிய வைத்தாலும், மனித பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள அவை உதவுவதில்லை, ஏனெனில் இவற்றில் தீர்க்க வேண்டிய கேள்விகள் அதிகம் உள்ளன. மனிதர்களை , குறிப்பாக மற்றவர்களை புரிந்து கொள்வதில் நான் மற்றவர்களை விட சிறந்து விளங்கவில்லை.”என்றும் கூறினார்.
“நாமெல்லாம், ஒரு சராசரி நட்சத்திரத்தின் சிறிய கோளின் மேம்பட்ட குரங்கு இனமே. ஆனால் நம்மால் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடியும். விஷேசமானவர்களாக ஆக்குகிறது.”
வாழ்க்கை போராட்டங்களுக்கு மத்தியில் ஹாக்கிங்குடன் நகைச்சுவை எப்போதுமே அவருடன் துணையாக இருந்தது. கருந்துளைகள் பற்றிய நமது புரிதலுக்குப் புரட்சிகரமான பங்களிப்புகளை வழங்கினார்.அவை இறுதியில் வெடித்து சிதறக்கூடும் என்று கூறினார் (ஹாக்கிங் கதிர்வீச்சு).
சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயக்கவியலை இணைத்து அண்டவியலை வகுப்பதில் முன்னோடியாக இருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். ஐசக் நியூட்டன் வகித்த புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் பதவியை வகித்தார்.
'கடவுள் துகள்' (Higgs boson) அதிக ஆற்றலில் நிலைத்தன்மையற்றதாக இருந்தால், அது பிரபஞ்சத்தையே அழிக்கக்கூடும் என்று எச்சரித்தார். தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகள் மூலம் அறிவியலை மக்களிடம் கொண்டு சென்றார்.
மார்ச் 14, 2018 அன்று தனது 76வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை, அறிவியல் பங்களிப்புகள் மற்றும் உடல் சவால்களைத் தாண்டி அவர் காட்டிய மனவுறுதி ஆகியவை அவரை உலக அளவில் ஒரு உத்வேகமாக மாற்றியதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவோம்.
நாம் ஒவ்வொருவரும் மன தைரியத்துடன் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்வோம். செம்மையாக வாழ வேண்டும் என்று சொல்வோம் தெரியுமா.. அதை ஸ்டீபன் ஹாக்கிங் போல வாழ்ந்தால் நிச்சயம் அடைய முடியும்.
{{comments.comment}}