டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம், அக்கமிட்டியின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி பரிந்துரைக்கும் யோசனைகளை அமபல்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
இந்தக் கமிட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எட்டு பேர் அறிவிக்கப்பட்டனர். இக்கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும். இந்திய அரசியலமைப்பு சாசனச் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பது குறித்தும் ஆராயப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த திட்டம்தொடர்பாக ராம்நாத் கோவிந்த் கமிட்டி என்ன பரிந்துரையை அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}