சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 250 பிடிஎஸ் இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2, தனியார் மருத்துவ கல்லூரிகள், மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கேகே நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியன உள்ளன. அரசு தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம் பி பி எஸ் பி டி எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
{{comments.comment}}