மதுரை: தம்பி விஜய் இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. ஒரு கோடு போட்டிருக்காரு. விஜய்யின் கட்சி குறித்து எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான அதிமுகவைச் சேர்ந்த செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் புதிய கட்சி குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். பலர் வாழ்த்தியுள்ளனர். ஒரிருவர் தவிர, பெரிதாக யாரும் விமர்சிக்கவில்லை. இவரின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துகள் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சிலர் கட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்களையும், சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், அது எல்லாம் மக்கள் கையில இருக்கு தலைவா. இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. ஒரு கோடு போட்டிருக்காரு. தம்பி விஜய் ஒரு தமிழர், நல்ல மனம் படைத்தவர். அவர் கட்சி குறித்து எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மதுரையில் கட்சி ஆரம்பிச்சவருதான் கமல்ஹாசன். ஊழலை ஒழிப்பேன் என்று கமலஹாசனும் சொன்னாரு. நீதி கிடைத்து மக்கள் சுபிட்சமாக வாழனும்னு சொன்னாரு. என்னாச்சு. சொல்லுங்கப்பா. இப்படி இருக்கும் போது, தம்பி இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்கார். தம்பி ஒரு தமிழர், இளைஞர் அதற்கு மாற்று கருத்து கிடையாது. அவரு கொள்கை இனி மேல் வரணும். இன்னும் நிறைய இருக்கு.
மக்கள் எல்லாரும் புரட்சித் தலைவரை விரும்பினாங்க. அவர் வர்றாருனா 18, 20 மணி நேரம் காத்து கிடந்தாங்க. எங்கம்மா வந்தாங்கனா மக்கள் காத்து கிடந்தாங்க. அந்த வரலாறு இப்ப இல்ல. அண்ணா திமுக வேறு, மாற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பது வேறு. தம்பி இப்ப கட்சி ஆரம்பிச்சுருக்கிறாரு. எப்படி கொண்டு போவாருனு தெரியாது. மக்கள் தான் நீதிமான்கள், மக்கள் தான் அதை சொல்லணும் என்றார்.
பாஜக நெருக்கடியால் விஜய் கட்சி - கோவை சத்யன்
இதற்கிடையே, விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு பாஜகதான் காரணம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், தப்பித்து விட்டார்.
அடுத்த தூண்டில் விஜய் தான். தமிழ்நாட்டில் வளர்ச்சியை பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}