"இங்க அடிச்சா அங்க கேட்கும்".. வந்து விட்டது ஊராட்சி மணி.. குறைகளைத் தீர்க்க!

Sep 29, 2023,12:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள குறைகளை  போக்கும்  விதமாக ஊராட்சி மணி என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. 


இதன்படி இலவச தொலைபேசி எண் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போன் செய்து நமது ஊர்ப் பிரச்சினைகளைச் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய முயற்சிப்பார்கள். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் இது செயல்படுத்தப்பட்டவுள்ளது.


இச்சேவையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செப்டம்பர் 27ம் தேதி இணைய வழியாக தொடங்கி வைத்துள்ளார். பொது மக்கள் 155340 என்ற எண்ணை அழைத்து  தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். 


இந்த மையம் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தற்பொழுது 10 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கிராமத்தினை சேர்ந்தவர்களும் மிக எளிமையான முறையில் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு ஏற்பாடுகளை  செய்துள்ளது தமிழக அரசு.


155340 என்ற தொலைப்பேசி வாயிலாகவும்,  Ooratchimani.in என்ற வலைத்தளம் மூலமும் எளிதாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, இணைய வயிலாக பெறப்படும் புகார்களின் தன்மையை பொருத்து விரைந்து தீர்வு காணப்படும். ஓவ்வொரு புகார்களும் குறிப்பிட்ட காலவரையரைக்குள் தீர்வு வழங்கப்படும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகலாம். இவர்களுக்கும் விரைந்து பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


"இங்க அடிச்சா அங்க கேட்கும்".. என்ற கேப்ஷனுடன் இதுகுறித்த விளம்பரத்தை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அடிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் இதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்விற்கு பின்னர் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

news

நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்