பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. குளுகுளு ஊட்டியில்.. கோலாகலமாக தொடங்கியது மலர் கண்காட்சி!

May 10, 2024,05:22 PM IST

ஊட்டி: ஊட்டியில்  மலர்களால் செய்யப்பட்ட யானை, சிங்கம், முயல் உள்ளிட்ட  டிசைன்களுடன் கூடிய கண்கவர் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 11 நாட்கள் நடைபெறுகிறது.  கண்காட்சியினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.


மலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது ஊட்டி. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். அப்படி தான் இந்த ஆண்டிற்கான சீசன் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களை கவரும் விதத்தில் ஊட்டியில் நகராட்சி சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




அந்த வரிசையில், 126வது ஆண்டாக மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ளது. மே 20ம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சியை  தமிழக அரசின் தலைமை  செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். 


மலர் கண்காட்சியை முன்னிட்டு, பிளாக்ஸ், பெட்டூனியா,பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்ட என பல்வேறு வகையான செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அவைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டள்ளன. 


விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு மற்றும் ஓசூரில்  இருந்து வரவழைக்கப்பட்ட, சுமார் ஒரு லட்சம் ரோஜா மலர்கள் மூலம் ஆக்டோபஸ், டிஸ்னி வோர்ல்டு, யானை, சிங்கம், புலி, வரையாடு, காட்டுஎருமை என பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தவிர பல ஆயிரம் மலர்களைக் கொண்டு ஆங்காங்கே ஆலங்கார மலர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களால் ஆன அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த மலர்கண்காட்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆக மொத்தத்தில் இந்தாண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்விக்கும் விதத்தில் பல சிறப்புகள் இருப்பது உறுதி. மலர் காண்காட்சியை முன்னிட்டு ஊட்டியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்